Show all

நாங்கள் நாடப் போவது மக்கள் மன்றமே! அறங்கூற்று மன்றம் இனி இல்லை, தினகரன் உறுதியான முடிவு

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக தினகரன் அறிவித்துள்ளார்.

தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள்; தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும், தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தால் அமமுக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

தினகரன் ஒரு மண் குதிரை என்றும், அவரை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றி கேட்டபோது, 'மண் குதிரை யார் என்பதை, எங்கு தேர்தல் நடந்தாலும் மக்கள் நிரூபிப்பார்கள்' என்று தினகரன் தெரிவித்தார்.

தினகரனின் இந்த அறிவிப்பால், அமமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 'தேர்தலை சந்தித்து நமது பலத்தை நிரூபிக்க வேண்டும்' என்றே பரவலாக தொண்டர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், தினகரனின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி- பன்னீர் அணியினரா அல்லது தினகரனா என்ற முடிவை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,957.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.