Show all

அதிபர் சிறிசேனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை! இலங்கை நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும்

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் சர்வதேச நாடுகளை கவலை கொள்ள செய்திருக்கிறது. அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நவுரெட் கூறுகையில், 'இலங்கையில் யார் தலைமையில் அரசு அமைப்பது? என்பதை மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் உறுதி செய்யும் பொருட்டு, பேரவைத்தலைவருடன் கலந்தாலோசித்து நாடாளுமன்றத்தை அதிபர் உடனடியாக கூட்ட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

இதைப்போல இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு அமைதியாக தீர்வு காண வேண்டும் எனவும், அனைத்து கட்சிகளும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளுமாறும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயக மதிப்பீடுகள் மற்றும் அரசியல் சாசன வழிமுறைகளை மதித்து சட்டத்தின் ஆட்சியையும், அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,957.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.