Show all

ஊடக அதிரடி! தமிழர் உணர்வுகளை மழுங்கடிக்க, புதுவகை கருத்துக் கணிப்பு உத்தி

21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஓர் ஊடகம்- தமிழர்களை மயக்கத்தில் ஆழ்த்த, தமிழர் உணர்வுகளை மழுங்கடிக்க ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டு புதுவகை உத்தியை மேற்கொண்டுள்ளது. 

கருத்துக்கணிப்பு:

தலைவர்கள் வலியுறுத்தல் எத்தகையது?

'தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஸ்டாலின், அன்புமணி, முத்தரசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியிருப்பது?

1. உண்மையான அக்கறை  

2. வழக்கமானது  

3. பரிசீலிக்கத்தக்கது

அந்த ஊடகமும், மேற்குறித்த ஸ்டாலின், அன்புமணி, முத்தரசன் ஆகிய மூன்று அரசியல் கட்சித் தலைவர்களும், நீட் தேர்வே வேண்டாம் என்கிற நிலையிலிருந்து, தமிழகத்திலேயே நீட் தேர்வை வையுங்கள் என்கிற கருத்துக்கு வந்து விட்டதாக காட்டி, பந்தியிலேயே உட்கார மறுப்பவனிடம் இலை எல்லாம் நல்ல இலைதான் என்று கேணத்தனமாக கருத்துப் பரப்புதல் செய்து, தமிழ் மக்களை மயக்க நிலைக்கு உட்படுத்தி அவர்களை நீட் தேர்வுக்கு ஒப்புக் கொண்டுவிட்டதாகவே, நாடகம் நடத்துவது ஆகும். 

தமிழ்மக்களே! ஊடகங்களின் இது போன்ற கருத்துக் கணிப்புகளில் பங்கு பெற்றாதீர்கள். நாக்கை பிடுங்கிக் கொள்ளும் படியாக நறுக்கென்று நாலு சொல் கேளுங்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,777.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.