Show all

மாவீரன் வைகோ! சீமான் கவனத்திற்கு

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திராவிட இயக்க வராற்றில் ஒரு மாவீரனைச் சுட்டிக் காட்டுங்கள் என்று சொன்னால் வைகோ அவர்களைத்தான் சுட்டிக் காட்ட முடியும். தமிழர்களுக்காக பாராளுமன்றத்திலும் முழங்குவார்! தமிழர்களுக்கு எழுச்சியுட்ட பட்டி தொட்டிகளிலும் முழங்குவார். உலகத்தில் எல்லா நாடுகளுக்கும் சென்று தமிழர் உரிமைகளுக்காக முழக்கமிடுவார். ஐநாமன்றத்திலும் ஏறி தமிழர்களுக்காக வாதிடுவார். அவர் சொல், செயல், மூச்சு அனைத்தும் தமிழ் மட்டுமே.

உலகத் தமிழின போராளி மேதகு பிரபாகரன் அவர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்காக பெரியதாக எதுவும் சாதிக்கவில்லை என்கிற கோபம் திமுக மீது உண்டு. அனால் அவரும் வைகோவை மட்டும் தமிழர் போர்ப்படை தலைவனாக மட்டுமே பார்த்தார்.

கலைஞரைத் தவிர தமிழகத்தில் எந்த அரசியல்வாதியும் வைகோவை தமிழ்க்கனலாக அஞ்சி ஒதுங்குவார்களேயன்றி அவரை ஒரு சாதாரண அரசியல்வாதியாக பார்க்க மாட்டார்கள். வைகோவின் புள்ளி விவரப் பேச்சில் அண்ணாவும், எம்ஜியார் அவர்களும் அசந்து போவார்கள்.

73 அகவை நிறைந்த வைகோ- திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் பிறந்தவர். கலைமுதுவர், சட்டவியல் இளவல் பட்டம் படித்து வழக்கறிஞராக தொழில் புரிபவர்.

இவருடைய இயற்பெயர்: வை. கோபால்சாமி, தமிழ் மக்களால் வைகோ என்று அறியப் படுகிறார்.

தன்னுயை 47வது அகவை வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக ஒளிர்ந்தவர்.  

திமுக, கலைஞர் கையை விட்டு கஞைரின் குடும்பத்திற்கு போய் விட்ட நிலையில், திமுக தலைவர் கருணாநிதியைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று கொலைப் பழி சுமத்தி திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் வைகோ. அதன் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.

மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருபவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக தமிழ்த்தொடர் ஆண்டு 5102ல் (2001) பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார்.

54ஆண்டுகளுக்கு முன்னம், பேரறிஞர் அண்ணா முன்னிலையில் சென்னை கோகலே மன்றத்தில் ஹிந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் முதன் முதலில் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தார் வைகோ.

தற்போது தமிழக அரசியலே கொள்கை இல்லாத கோமளிகளின் கூட்டத்தாரிடமும், பாஜகவின் ஆட்டுவித்தலிலும் சிக்கி விட்ட நிலையில் வை.கோ ஒரு தனி இயக்கமாக செயல்பட்டு வருகிறார். தமிழ்ததொடர் ஆண்டு 5105-5110 வாக்கில் (2004-2009) ஈழத்தில் நடந்த தமிழ்இனப்படுகொலைக்கு இந்திய அரசு எப்படி எல்லாம் உதவியது என்பதனை விளக்கி 'குற்றம் சாட்டுகிறேன்' எனும் புத்தகத்தினை வைகோ எழுதியுள்ளார். அந்த ஆண்டுகளில் காங்கிரசு இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கிற்கு தாம் எழுதிய கடிதங்களையும், தனக்குப் அவர் எழுதிய கடிதங்களையும் இந்தப் புத்தகத்தில் தொகுத்து உள்ளார் வைகோ. 

ஆற்றுநீர் இணைப்புக்காக ஒரு மாதகாலம் நடைபயணமும் மேற்கொண்டார். தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளான முல்லைப்பெரியாறு பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, ஸ்டெர்லைட் என பல போராட்டங்களை நடத்தி வருபவர் வைகோ.

மதுவை எதிர்த்து 2400 கல் தொலைவு தூரம் தொடர் நடைப்பயணம் மேற்கொண்டவர்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கடுமையாகப் போராடி அதில் வெற்றி பெற்றவர். 30 முறை கைதானவர். ஐந்து ஆண்டுகள் சிறையில் தன் வாழ்நாளை கழித்தவர். ஒரு கோடி கல் தொலைவுகளுக்கும் மேல் பயணம் செய்தவர், தமிழகத்தில் 50000 கிராமங்களுக்கும் மேல் சென்று மக்களை சந்தித்தவர்.

வேலிவேளாண் மரங்களை அழிப்பதற்காக வழக்குத் தொடுத்து வாதாடி இருக்கின்றார். தமிழ்நாட்டில் பல்வேறு நீர்நிலைகள், கண்மாய்கள், ஆற்றுப் படுகைகள் மற்றும் தரிசு நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்ந்துள்ள வேலிவேளாண் மரங்களால் நீர்வளம், நிலவளம் குன்றி வருகிறது. எனவே அம்மரங்களை அடியோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பிற துறைகளின் செயலாளர்களுக்கு கடிதம் எழுதினார். தமிழக அரசின் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் மனுபதிகை செய்தார்.

அதனடிப்படையில் வேலிவேளாண் மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்அறங்கூற்றுமன்றம் ஆணை பிறப்பித்தது. 

முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக எட்டு ஆண்டுகள் போராடி இருக்கின்றார். மீத்தேனை எதிர்த்துத் தஞ்சை மண்டலத்தில் ஊர் ஊராகச் சென்று கருத்துப் பரப்புதல் செய்திருக்கிறார்.

காவிரிப் பிரச்சினையில் பத்தாயிரம் பேர்களைத் திரட்டிக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து கல்லணை வரையிலும் நடந்து சென்றிருக்கிறார்.

ஸ்டெர்லைட் பிரச்சினையில் உலகக் கோடீசுவரர்களுள் ஒருவரான ஸ்டெர்லைட் அதிபரை எதிர்த்துப் பதினெட்டு ஆண்டுகள் போராடி இருக்கின்றார். இதற்காக உயர்அறங்கூற்றுமன்றத்திலும் உச்ச அறங்கூற்றுமன்றத்திலும் தானாகவே வாதாடியிருக்கின்றார்.

தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்காகப் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தை, உலக அரங்கில் முதன்முதலாக முன்வைத்தவர் இவரே. 

சுவிஸின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிங்கள அரசு- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பான ஐ.நா. குழுவின் முழுமையான அறிக்கை பதிகை செய்தார்.

வை.கோ 50க்கும் அதிகமான புத்தகங்களை இயற்றியுள்ளார். அதில் குறிப்பிட்ட புத்தகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளவை. 

1.கனவு நனவாகியது

2.இதயச் சிறகுகள்

3.வீரத்தின் புன்னகை பரவட்டும்

4.தமிழிசை வெல்வோம்

5.நாதியற்றவனா தமிழன்?

6.குற்றம் சாட்டுகிறேன்

7.இரத்தம் கசியும் இதயத்தின் குரல்

8.சிறையில் விரிந்த மடல்கள்

9.ஹிந்தியை எதிர்க்கிறோமே ஏன்?

10.தமிழ் ஈழம் ஏன்?

11.படையின் மாட்சி

12.தமிழர் வாழ்வில் தந்தை பெரியார்

13.வைகோவின் சங்கநாதம்

14.வாழ்வு மலரும் வழி

15.தமிழ் இசைத்தேன்

16.இசைத்தேனாய் இலக்கிய தென்றலாய்

17.தடைகளை தகர்ப்போம்! தாயகம் காப்போம்!

18.உலக நாடுகளின் ஒன்றியம்

19.வரலாறு சந்தித்த வழக்குகள்

20.பெண்ணின் பெருமை

21.வெற்றிப்படிகள்

22.தனலும் தன்மையும்

23.என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

24.வெற்றி சங்கொலி

25.வாகை சூடுவோம்

26.உலகுக்கு ஒரே பொதுமறை

27.புயலின் முகங்கள்

28.ஒற்றுமை ஓங்கட்டும்

29.தமிழரின் போர்வாள்

30.மனித உரிமைகள்

31.போற்றி பாடுவோம்

32.ஆம் நம்மால் முடியும்

33.வைகோவின் கடிதங்கள்- பாகம் 1

34.வைகோவின் கடிதங்கள்- பாகம் 2

35.மறுமலர்ச்சி பெற எழுச்சி நடை

36.உழைப்பால் உயருவோம்

37.யமுனைக் கரையில்

38.மனைமாட்சி

39.தமிழால் உயருவோம்

40.பரணிக்கரையில் புரட்சிக்கனல்

41.தாகம் தீர பாசனம் பெருக

42.தேன் மலர்கள்- (பேச்சுக்கள்)

43.நடுநாடு தந்த நம்பிக்கை

iகோ தமிழர்களின் வெளிச்சம்! வைகோ தமிழர்களின் போர்வாள்! வைகோ தனிமனிதரல்ல ;தமிழ்இயக்கம்! iகோ தமிழர்களின் சொத்து. வைகோவைப் புறந்தள்ளினால் கடந்த ஐம்பது ஆண்டுகால தமிழர் விழிப்புணர்வு வரலாற்றில் பெரும்பகுதி பொருளற்றதாகி விடும். 

அண்மைக் காலமாக சீமான் வைகோவை அன்னியராக்க முயல்வது வரலாறு அறியாத பிழையாகி விடும். வைகோவிற்கு அவர் வாழும் காலத்தில் இன்று வரை தமிழ் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் கிடையாது. அவர் மனம் புண்படும் படியான சொற்கள், செயல்கள் தமிழ் இனத்தை பழிபாவத்திற்கே இட்டுச் செல்லும். வாழ்க வைகோ. வைகோவின் புகழுக்கு தமிழர்கள் கேடயமாக நிற்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,750.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.