Show all

யார் அழுதார்கள் மோடி சென்னை வரவேண்டுமென்று! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் துப்பில்லை: மக்கள்

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் நடைபெற உள்ள ராணுவக் கண்காட்சியில், சட்டப்படியான காவிரி மேலாண்மை அமைக்கத் துப்பில்லாத மோடி கலந்துகொள்கிறாராம்! யார் இவர் சென்னை வந்தாக  வேண்டும் விழுந்து புரண்டு அழுதார்கள் என்று தமிழ் மக்கள் சலித்துக் கொள்கிறார்கள். சென்னையை அடுத்த திருவிடந்தையில் வருகிற புதன் முதல் சனிக்கிழமை வரை ராணுவக் கண்காட்சி நடைபெறவுள்ளது. நான்கு நாள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை நடுவண் பாதுகாப்புத்துறை அமைச்சகம் நடத்துகிறது. ரூபாய் 480 கோடி செலவில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 60 நாடுகளைச் சேர்ந்த ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்குபெற உள்ளன. மேலும், கண்காட்சி அரங்கில் ராணுவத் தளவாடங்கள், பீரங்கிகள், ஏவுகணைகள், போர்க் கப்பல்கள் உள்ளிட்டவை வைக்கப்படவுள்ளன. இந்தக் கண்காட்சியில் பங்கேற்க சட்டப் படியான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கமைக்காக தமிழகமே போராடிக் கொண்டிருக்கிற நிலையில் மோடி கலந்துகொள்ளவுள்ளதான செய்தி தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

மோடியின் வருகையை யொட்டி சென்னை விமான நிலையத்திலும் வழி நெடுகவும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடிக்கு கருப்புக் கொடி காட்ட திமுக உள்ளிட்ட சில கட்சிகள் அறிவிப்பு வெளியிட்டள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,750. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.