Show all

மதுசூதனன் சொத்து மதிப்பு அன்றும் இன்றும்

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை இராதாகிருட்டினன்நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (21.12.2017) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இவர்கள் மூவரும் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களுடன் சொத்து மதிப்பு பட்டியலையும் அவர்கள் இணைத்துள்ளனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் இன்று அளித்துள்ள சொத்து மதிப்பு பட்டியலில் அசையும் சொத்துகள் ரூ.12.53 லட்சம், அசையா சொத்துகள் ரூ.1.37 கோடி, மொத்த சொத்து மதிப்பு ரூ.1.49 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நின்று போன இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுவில் மனைவி மற்றும் வாரிசுகளுடன் இணைந்த சொத்து மதிப்பு ரூ.5.37 கோடி என்று இவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் இணைத்துள்ள சொத்து பட்டியலில் அசையும் சொத்துகள் ரூ.2.57 லட்சம், அசையா சொத்துகள் ரூ.10 லட்சம். மொத்த சொத்து மதிப்பு 12.57 லட்சம் என குறிப்பிட்டுள்ளார்.

தினகரனின் அசையும் சொத்துகள் ரூ16.73 லட்சம், அசையா சொத்துகள் ரூ.57.44 லட்சம், மொத்த தனது சொத்து மதிப்பு ரூ.74.17 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவியோடு இணைந்த சொத்து மதிப்பைக் குறிப்பிடவில்லை.

கடந்த நின்று போன இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுவில் தினகரன், தனது தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.69 லட்சம் என்றும் மனைவி மற்றும் வாரிசுகளுடன் இணைந்த சொத்து மதிப்பு ரூ.10.77 கோடி என்று குறிப்பிட்டிருந்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,623

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.