Show all

குஜராத் தேர்தலில் போட்டியிடும் 137 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளனவாம்

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத்தில் நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் 137 குற்றவழக்கில் சிக்கியவர்கள், சிக்க வைக்கப் பட்டவர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

குஜராத்தில் வரும் 23மற்றும் 28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 அகிய நாட்களில் (டிசம்பர் 9, 14) இரண்டுகட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் 900-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட உள்ளனர்.

இவர்களில் 137 பேர் மீது கொலை, கடத்தல், கற்பழிப்பு போன்ற பயங்கர வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கில் சிக்கியவர்கள் எத்தனை பேர், சிக்க வைக்கப் பட்டவர்கள் எத்தனை பேர் என்பதெல்லாம் எப்;போதும் தெரிந்து கொள்ள முடியாது. அரசியல் அடிப்படையில் சிலர் எப்போதாவது விடுவிக்கப் படலாம்.

ஆனால் இந்தியச் செம்மறியாட்டு ஊடகங்கள், ‘குஜராத்: முதல் கட்ட தேர்தலில் 137 கிரிமினல்கள் போட்டி என்றே செய்தி போடுகின்றன.

மொத்த வேட்பாளர்களில் இவர்களின் அளவு 15 விழுக்காடாக உள்ளது. காங்கிரஸ் சார்பில் 20 பேர்களும், பாஜக சார்பில் 10 பேர்களும், பி.எஸ்.பி சார்பில் 8 பேர்களும், தேசிய வாத காங்கிரஸ் சார்பில் 3 பேர்களும், ஆம் ஆத்மி சார்பில் ஒருவர் என போட்டியிடுவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக மிக நல்ல மனிதர் மீதும் வழக்கு இருக்கும்! மிக மிக கெட்ட மனிதர் மீதும் வழக்கு இருக்கும். ஊடகங்கள் ஆளும் ஆட்;சியாளர் மகிழும் வகையான கணக்கு தரும்.

யார் நல்லவர் யார் கெட்டவர் என்றெல்லாம் தெரிந்தெடுக்க அறங்கூற்று மன்றத்திற்கு சட்ட அமைப்பில் சரியான சல்லடை கிடையாது.

மக்கள் அப்போதைக்கு தங்கள் அடையும் சொற்ப ஆதாயத்தைக் கணக்கில் கொண்டு வாக்களிப்பார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,624

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.