Show all

எம்.ஜி.ஆர்.-அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபாவும் தமிழக அரசியல் களத்தில் உள்ளாராம்

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராதாகிருட்டினன்நகர் தொகுதியில் எம்.ஜி.ஆர்.-அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா போட்டியிடுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். தர்மபுரியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது அவர் இதனை நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தீபா கூறியதாவது:

தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வழங்கிய நிலையில் உடனடியாக இராதாகிருட்டினன்நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது திட்டமிட்ட சதியாகும்.

இராதாகிருட்டினன்நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறேன். தமிழகத்தில் தற்போது பெரும்பான்மை இல்லாத அரசு நடக்கிறது. நடுவண் அரசின் வழிகாட்டுதலின்படியே தற்போதைய தமிழக அரசு செயல்படுகிறது.

செயலலிதாவிற்கு மகள் இருப்பதாக தற்போது பரப்பப்படும் தகவல் பொய்யானது. அதில் உண்மையில்லை. செயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற முயற்சியாகவே இத்தகைய தகவல் பரப்பப்படுகிறது.

இவ்வாறு தகவல் பரப்புபவர்களை பின்னணியில் இருந்து யாரோ இயக்குகிறார்கள். இதுதொடர்பாக வழக்கு தொடர உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,624

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.