Show all

லக்ஸ் திரையில் 11 அரங்குகளிலும் காட்சிகள் ரத்து! வருமான வரிச் சோதனையாம்

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலா உறவினர் வீடுகள், தொழிலகங்கள் என 190 இடங்களில் இன்று தமிழக வரலாறு காணாத மிகப் பெரிய அளவினதாக வருமான வரித் துறையினர் சோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.

இதன் பகுதியாக சசிகலாவின் உறவினர் விவேக் நடத்தும் ஜாஸ் திரை அலுவலகம் மற்றும் அதற்கு சொந்தமான லக்ஸ் திரை அரங்குகளிலும் சோதனை நடக்கிறது.

இதன் காரணமாக வேளச்சேரியில் உள்ள லக்ஸ் திரையில் 11 அரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனை சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். செயலிலதா உயிருடன் இருந்தபோதே ஜாஸ் திரை தொடங்கப் பட்டது.

ஜாஸ் நிறுவனம் தமிழ் திரையில் தலையாய விநியோக நிறுவனமாகத் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் இன்று காலை முதலே வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனால் 11 அரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. படம் பார்க்க ஆர்வத்துடன் வந்த பல நூறு பேர் காட்சிகள் இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். லக்ஸ் சினிமா அரங்குகளுக்கான முன்பதிவு செய்யும் தளத்திலும் படங்களுக்கு டிக்கெட் பதிவு செய்ய முடியவில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,601

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.