Show all

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் அரசியல் என்றால் தாங்காது பூமி

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதாவிற்குப் பின் தினகரன் சார்ந்த நிறுவனங்களில் வருமான வரிச் சோதனை தொடங்கப் பட்டிருக்கிறது. ஏன் எதற்கு என்பது தீர்மானிக்கப் பட்டு விட்டதா! இனிதான் தீர்மானிக்கப் படுமா தெரிவிக்கப் படவில்லை.

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.

இது தவிர ஹைதரபாத், பெங்களூரு டெல்லியில் 82 இடங்களில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.

 

சென்னை படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையில் சோதனை

புதுச்சேரி ஆரோவில் உள்ள தினகரனின் பண்ணை வீட்டிலும் சோதனை

கோடநாட்டில் உள்ள கர்சன் சொகுசு இல்லத்தில் சோதனை நடந்து வருகிறது.

சென்னை தி.நகரில் சசிகலா முதலீடு செய்துள்ள நகைக்கடையில் சோதனை நடந்து வருகிறது.

கோவையில் மணல் குத்தகைதாரர் ஆறுமுகசாமி வீட்டில், அலுவலக்த்தில், கோவை ராம் நகரில் உள்ள செந்தில் குரூப் நிறுவனங்களில் சோதனை

சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள சுரானா கார்ப்பரேசன் லிமிட்டெட் என்ற நிறுவனத்திலும், ஜெயா தொலைக்காட்சி பொதுமேலாளர் உள்ளிட்ட அலுவலகத்தின் நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை.

தினகரன் அணி புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயனின் அறந்தாங்கி அருகே உள்ள இல்லத்தில் தற்போது சோதனை.

தற்போது கோடநாடு பங்களாவில் மரவேலை பார்த்துவந்த சஜிவனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து செயல்படுத்த இயலா நிலையிலுள்ள சசிகலா தொடர்பான 10 குழுமங்களை குறிவைத்து சோதனை நடந்து வருகிறது.

சுரானா, சுனில், புதுச்சேர் ஸ்ரீ லட்சுமி, விண்ட் சுப்பிரமணியன் தொடர்புடைய நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் உள்ளனர்.

தற்போது போயஸ் கார்டன் வீட்டில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் சசிகலாவின் வழக்கறிஞராக நாமக்கல்லில் இருந்துவரும் செந்தில் வீட்டிலும், அறந்தாங்கி அருகே தினகரன் அணியின் மாவட்ட செயலாளர் வீட்டிலும், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜிடமும் அதிகரிகள் சோதனை மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், வேளச்சேரி ஜாஸ் சினிமாஸ் வளாகத்தில், பெங்களூருவில் உள்ள தினகரன் ஆதரவாளர் மற்றும் கர்நாடகா அம்மா அணி செயலாளர் புகழேந்தி வீட்டில், திருச்சியில் உள்ள சசிகலாவின் உறவினர் கலியபெருமாள் வீட்டில் என நாடெங்கும் உள்ள சசிகலா தொடர்பான அனைத்து இடங்களிலும் சோதனை அதிரடியாக நடத்தப்பட்டு வருகிறது.

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் என கிட்டத்தட்ட 160 இடங்களுக்கும் மேல் சோதனை நடந்து வருகிறது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கலைக் கல்லூரி, அந்தக் கல்லூரியில் பணியாற்றும் அன்பு என்பவரது வீட்டில் என சோதனை நடந்து வருகிறது.

அதேபோல, சென்னை அடையாறு தினகரன் வீட்டில், தினகரன் வீட்டுக்குள் இருந்த நிலையில் திடீரென நுழைந்த அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். தினகரன் அணி மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், திவாகரன் உதவியாளர்கள் ராசுப்பிள்ளை, சுஜய் ஆகியோர் வீடுகளிலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும் கொடநாடு எஸ்டேட்டிலும் சோதனை நடந்துவருகிறது. 12 பேர் கொண்ட வருமான வரித்துறையினர், கொடநாடு எஸ்டேட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தஞ்சை அருளானந்தா நகரில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டில், மன்னார்குடியில் மன்னை நகரில் உள்ள தினகரனில் வீட்டில், சசிகலாவின் அண்ணன் மகன் மறைந்த மகாதேவன் வீட்டில், இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டிலும் அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,601

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.