Show all

லிங்காயத் எழுச்சி! ஹிந்துத்துவா திணிப்பு பாஜக, அரசியலில் சிறுபான்மையாகப் போகிற வரலாறு தொடங்கியிருக்கிறது

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து மகாரஷ்டிராவிலும் தனி மதத் தகுதி கோரி லிங்காயத் சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களில் ஒருவர் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநிலத்தில் லிங்காயத் மதத்தை சுமார் 4 கோடி பேர் பின்பற்றி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் லிங்காயத் சமுதாயத்தினருக்கு தனி மதத் தகுதி வழங்கப்பட்டுள்ளது. அது போல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் அங்கீகாரம் அளிக்க வேண்டும். மேலும் தேசிய அளவில் லிங்காயத் சமுதாயத்தினரை மதச் சிறுபான்மை குழு என அங்கீகரிக்க வேண்டும். 

லிங்காயத் சமுதாயத்திற்கு சுதந்திரமான மத நிலைப்பாட்டை அரசு வழங்கும் வரையில் பேரணிகள் தொடரும் என கூறினார். முன்னதாக மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் உள்ள டிவிஷனல் கமிஷனர் அலுவலகம் முன்பு லிங்காயத் ஒருங்கிணைப்பு குழு மூலம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் முதன் முதலாகத் தமிழகம் மொழி அடிப்படை என்பதை முன்னெடுத்தது. அதற்கு காங்கிரஸ் அரசின் ஹிந்தித் திணிப்பு காரணமாய் அமைந்தது. தற்போது மத அடிப்படை என்ற தலைப்பை லிங்காயத் என்கிற மதக்குழு முன்னெடுத்திருக்கிறது. இதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து சமயத்தவர்களையும் ஹிந்து என்கிற தலைப்பில் முன்னெடுக்க முயலும் பாஜகவின் ஹிந்துத்துவா திணிப்பு காரணமாய் அமைகிறது.

இந்திய அரசியல் அமைப்பு கட்டமைப்பில் இந்தியா மதச்சார்பற்ற நாடாக கட்டுமானம் செய்யப் பட்டது. இந்தியாவில் முகமதியர்களும், கிறித்துவர்களும் மதச்சிறுபான்மை சலுகைகளை ஏராளமாக அனுபவிப்பதாக பாஜக குற்றம் சாட்டி இந்தியவை ஹிந்துத்துவா நாடு என்று மாற்றும் முயற்சிக்காக செயல்பட்டு வருகிறது. ஆனால் ஹிந்து மதம் என்று ஒரு மதமேயில்லை எங்கள் லிங்காயத் தனிமதம் என்ற குரல் முதன் முதலாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இனி அடுத்தடுத்து பல்வேறு சமயங்கள் குரல் எழுப்பும். ஹிந்தித் திணிப்பு அடையாளத்தை வைத்து குப்பை கொட்டிய காங்கிரஸ் அரசியலில் சிறுபான்மையாக போனது வரலாறு. தற்போது மதஅடையாளத்தில் ஹிந்துத்துவா திணிப்பில் ஈடுபட்டு வரும் பாஜக அரசியலில் சிறுபான்மையாகப் போகிற வரலாறு தொடங்கியிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,752.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.