Show all

வருந்துகிறார் சந்திரபாபு நாயுடு! பண்பு அடிப்படையில், ஐயா என்று அழைப்பதற்கான தகுதி இல்லாதவராம் மோடி

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆந்திரா தலைநகர் அமராவதியில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில சிறப்பு தகுதி விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஆந்திராவுக்கு சிறப்பு தகுதி விவகாரத்தில் மோடி அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. 5 கோடி மக்களின் நலனை மோடி அரசு புறக்கணிக்கிறது. வாக்கு தவறிய மோடி குறித்து நாடறியும் வகையில் ஆந்திரா போராட்டம் நடத்தியுள்ளது. ஆந்திராவில் பாஜக தனது கட்சியை பலப்படுத்தி கொள்ளவே, நிதி வழங்காமல் ஆளும் கட்சிக்கு அவப்பெயர் வரும்படி நடக்கிறது. நிதி வழங்கி, அதுகுறித்து நான் தப்பான கணக்குக் காட்டுவதாக பாஜக கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறது. 

மோடி எனக்கு அரசியலில் இளவல் ஆனாலும், அவர் தலைமை அமைச்சர் என்பதால், ஐயா என அழைத்தேன். அந்த மரியாதையை அவர் காப்பாற்றிக் கொள்ளவில்லை. அவருடைய குணம் வெளிப்பட்டது. அதனால்தான் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினோம். இவ்வாறு சந்திரபாபு கூறினார்.

வாக்கு தவறிய பண்பின்மை மோடியை ஐயா என்று அழைக்க வேண்டியதாயிற்றே என்று வருந்துகிறார் சந்திரபாபு நாயுடு. 

தமிழகத்திற்கு மோடி காவிரி மேலாண்மை வழங்காமல், அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத தேசத்துரோகி. நாம் எந்த வகையாக வருந்துவது. பன்னீர்- எடப்பாடியிடம் அப்படி எந்த வருத்தத்தையும் கணோமே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,750.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.