Show all

உலகம் கொண்டாடவிருக்கிறது நாளை உலகப் பெண்கள் நாளை! தமிழ்ப்பண்பாட்டில் எல்லா நாளும் பெண்கள் நாளே

நாளை- கொண்டாடப் படவிருக்கிற உலகப் பெண்கள் நாள், உலகின் அனைத்து நாட்கள் போலவே போராடிப் பெறப்பெற்றதே. தமிழர் பண்பாட்டில் போராடாமலே கிடைத்திருந்தது எல்லா நாள் கொண்டாட்டத்தினருக்கும் உரிமைகள். ஆனால் தமிழுக்கு, தமிழருக்கான உலக நாள் இன்னும் கனவாகவே இருந்து வருகின்றது. உலகப் பெண்கள் நாளிலும் பெண்ணுரிமைக்கான தேவை தமிழ்ப்பண்பாட்டில் எழாத நிலையில்- இன்னும் கனவாகவே இருந்து வரும் தமிழுக்கு, தமிழருக்கான உலக நாள் அமைய உறுதியேற்போம்.

23,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நாளை உலகப் பெண்கள் நாள். ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். நாளது 32,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-4890 அன்று (14.06.1789) சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். 

கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரைத் துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள குதுகலம் கரைபுரள முழக்கங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. 

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களை அமைதிப் படுத்த முயன்றான்- இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடியும் துறந்தான். 

ஐரோப்பியவின்  மற்ற நாடுகளிலும் இது போலவே பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். கிரீசில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பேராளர்கள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் தருணம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். 

இந்த நிலையில் பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-4949 (08.03.1848) ஆகும். அன்றைய நாள்தான் உலகப் பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

ஆனால் நம் பழந்தமிழகத்தில் இப்படிப் பெண்ணுரிமை பெறுவதற்கு மட்டுமல்ல எந்த நாளுக்கும் போராடி உரிமை பெற வேண்டிய தேவை இருந்தது இல்லை. மன்னன் அதியமானை நெறிப்படுத்தி நெல்லிக்கனி பெற்ற ஒளவையார் போல, யாரெல்லாம் பெண்பாற் புலவர்களாக அன்றைய தமிழக அரசியலில் கோலோச்சியிருக்கிறார்கள் என்று தேடினால் மனம் நிறைவடையும் அளவிற்கு பட்டியல் நீள்கிறது. 

1.அச்சியத்தை மகள் நாகையார்
2.அள்ளுரர் நன்முல்லை
3.ஆதிமந்தி
4.இளவெயினி
5.உப்பை
6.ஒக்கூர் மாசாத்தியார்
7.கரீனா கண்கணையார்
8.கவியரசி
9.கழார் கீரன் எயிற்றியார்
10.கள்ளில் ஆத்திரையனார்
11.காக்கை பாடினியார் 
12.காமக்கணிப் பசலையார்
13.காரைக்காலம்மையார்
14.காவற்பெண்டு
15.காவற்பெண்டு
16.கிழார் கீரனெயிற்றியார்
17.குட புலவியனார்
18.குமிழிநாழல் நாப்பசலையார்
19.குமுழி ஞாழல் நப்பசையார்
20.குறமகள் இளவெயினி
21.குறமகள் குறிஎயினி
22.குற மகள் இளவெயினியார்
23.கூகைக்கோழியார்
24.தமிழறியும் பெருமாள்
25.தாயங்கண்ணி
26.நக்கண்ணையார்
27.நல்லிசைப் புலமை மெல்லியார்
28.நல்வெள்ளியார்
29.நெட்டிமையார்
30.நெடும்பல்லியத்தை
31.பசலையார்
32.பாரிமகளிர்
33.பூங்கண்ணுத்திரையார்
34.பூங்கண் உத்திரையார்
35.பூதபாண்டியன் தேவியார்
36.பெண்மணிப் பூதியார்
37.பெருங்கோப்பெண்டு
38.பேய்மகள் இளவெயினி
39.பேயனார்
40.பேரெயென் முறுவலார்
41.பொத்தியார்
42.பொன்மணியார்
43.பொன்முடியார்
44.போந்தலைப் பசலையார்
45.மதுவோலைக் கடையத்தார்
46.மாற்பித்தியார்
47.மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
48.மாறோக்கத்து நாப்பசலையார்
49.முள்ளியூர் பூதியார்
50.முன்னியூப் பூதியார்
51.வரதுங்க தேவியார்
52.வில்லிபுத்தூர்க் கோதையார்
53.வெண்ணிக் குயத்தியார்
54.வெள்ளி வீதியார்
55.வெறிபாடிய காமக்கண்ணியர்

பெண்களுக்கு ஒற்றை நாள் அறிவித்து பெண்களைக் கொண்டாடியவர்கள்; அல்லர் பழந்தமிழர். அன்றாடம் பெண்கள்; பேணும் கருத்தினராக இருந்தனர் தமிழர்.

உலகத்தில் பலதரப்பட்டவர்களின் போராட்டதால் கிடைக்கப் பெற்றவை பல்வேறு உலக நாட்கள். ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள் நூற்றுக்கும் மேலானவைகள்.

இந்த வகை உரிமைகள் எல்லாம் ஆரியர், அராபியர், ஐரோப்பியர் ஆதிக்க வரவுக்கு முந்தைய நமது பழந்தமிழகத்தில் போராடாமலே அமைந்திருந்தது தாம் தமிழர் வாழ்வியலில். 

ஆனால் இன்றைய நாள் வரை தமிழுக்கும் தமிழருக்குமான உரிமைகள்: கல்வியில், ஆட்சியில், நிருவாகத்தில், அறங்கூற்று மன்றத்தில், கோயிலில், இல்லாத நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய உலகப் பெண்கள் நாளிலும் நமது தமிழ் தமிழருக்கான நாளுக்காக நாம் முன்னெடுக்காமல் இருப்பவை யாவை என்று சிந்திப்போம்.

உலகம் ஒற்றை நாள் ஒதுக்கிக் கொண்டாடுகிற உலக உரிமைகள்:
26,சனவரி உலக சுங்கத்துறை நாள்
27,சனவரி உலக இன அழிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் நினைவுகூறும் நாள்
30,சனவரி உலக தொழுநோய் ஒழிப்பு நாள்
2,பிப்ரவரி உலக சதுப்பு நில நாள்
21,பிப்ரவரி உலக தாய் மொழி நாள்
8,மார்ச் உலக பெண்கள் நாள்
13,மார்ச் உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள்
15,மார்ச் உலக நுகர்வோர் நாள்
21,மார்ச் உலக வன நாள்
21,மார்ச் உலக இனவெறி ஒழிப்பு நாள்
21,மார்ச் உலக கவிதைகள் நாள்
22,மார்ச் உலக தண்ணீர் நாள்
23,மார்ச் உலக வானிலை நாள்
24,மார்ச் உலக காச நோய் நாள்
2,ஏப்ரல் உலக சிறுவர் நூல் நாள்
4,ஏப்ரல் நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்
7,ஏப்ரல் உலக நலங்குத்துறை நாள்
18,ஏப்ரல் நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான உலக நாள்
22,ஏப்ரல் புவி நாள்
23,ஏப்ரல் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாள்
26,ஏப்ரல் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்
1,மே உலகத் தொழிலாளர் நாள்
3,மே ஞாயிற்று நாள்
3,மே உலக ஊடக விடுதலை நாள்
4,மே உலக தீயணைக்கும் படையினர் நாள்
5,மே சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள்
8,மே உலக செஞ்சிலுவை நாள்
12,மே உலக செவிலியர் நாள்
15,மே உலக குடும்ப நாள்
17,மே உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்
18,மே அனைத்துலக அருங்காட்சியக நாள்
19,மே பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்
21,மே உலக கலாச்சார முன்னேற்ற நாள்
22,மே அனைத்துலக பல்லுயிர்ப் பெருக்க நாள்
25,மே ஆப்பிரிக்க நாள்
31,மே உலக புகையிலை எதிர்ப்பு நாள்
5,சூன் உலக சுற்றுசூழல் நாள்
8,சூன் உலகக் கடல் நாள்
12,சூன் உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள்
14,சூன் உலக குருதிக் கொடையாளர் நாள்
14,சூன் உலக வலைப்பதிவர் நாள்
20,சூன் உலக அகதிகள் நாள்
23,சூன் ஐக்கிய நாடுகள் சமூக வாழ்வு நாள்
26,சூன் சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்
11,சூலை உலக மக்கட்தொகை நாள்
20,சூலை அனைத்துலக சதுரங்க நாள்
1,ஆகத்து உலக சாரணர் நாள்
9,ஆகத்து சர்வதேச பூர்வ குடி மக்கள் நாள்
12,ஆகத்து உலக இளைஞர் நாள்
13,ஆகத்து உலக இடக்கையாளர் நாள்
23,ஆகத்து அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் நாள்
30,ஆகத்து அனைத்துலக காணாமற்போனோர் நாள்
8,செப்டம்பர் உலக எழுத்தறிவு நாள்
14,செப்டம்பர் அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள்
15,செப்டம்பர் அனைத்துலக மக்களாட்சி நாள்
16,செப்டம்பர் சர்வதேச ஓசோன் படலம் பாதுகாப்பு நாள்
21,செப்டம்பர் சர்வதேச அமைதி நாள்
22,செப்டம்பர் தானுந்து அற்ற நாள்
27,செப்டம்பர் உலக சுற்றுலா நாள்
1,அக்டோபர் சர்வதேச முதியோர் நாள்
2,அக்டோபர் அனைத்துலக வன்முறையற்ற நாள்
4,அக்டோபர் உலக வன விலங்குகள் நாள்
5,அக்டோபர் உலக ஆசிரியர் நாள்
9,அக்டோபர் உலக தபால் நாள்
10,அக்டோபர் உலக மனநலம் நாள்
14,அக்டோபர் உலகத் தர நிர்ணய நாள்
16,அக்டோபர் உலக உணவு நாள்
17,அக்டோபர் உலக வறுமை ஒழிப்பு நாள்
24,அக்டோபர் ஐக்கிய நாடுகள் நாள்
11,நவம்பர் பொதுநலவாய நாடுகள் - நினைவுறுத்தும் நாள
;14,நவம்பர் உலக நீரிழிவு நோய் நாள்
16,நவம்பர் உலக சகிப்பு நாள்
17,நவம்பர் அனைத்துலக மாணவர் நாள்
20,நவம்பர் ஆப்ரிக்க தொழில்மய நாள்
20 நவம்பர் அகில உலக குழந்தைகள் நாள்
21,நவம்பர் உலக தொலைக்காட்சி நாள்
24.நவம்பர் படிவளர்ச்சி நாள்
25,நவம்பர் பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்
1,டிசம்பர் உலக எயிட்சு நாள்
2,டிசம்பர் சர்வதேச அடிமை ஒழிப்பு நாள்
3,டிசம்பர் சர்வதேச ஊனமுற்றோர் நாள்
5,டிசம்பர் உலக பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற பங்காளர்களின் நாள்
9,டிசம்பர் சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்
10,டிசம்பர் மனித உரிமைகள் நாள்
11,டிசம்பர் சர்வதேச மலை நாள்
17,டிசம்பர் பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்
18,டிசம்பர் சர்வதேச குடிபெயர்ந்தோர் நாள்
19,டிசம்பர் ஐக்கிய நாடுகள் தெற்கு-தெற்கு ஒப்பந்த நாள்
21,டிசம்பர் சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்
23,டிசம்பர் தேசிய உழவர்கள் நாள் (இந்தியா)
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,545.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.