Show all

கிஷோர் குமார் தெனாவெட்டு! ஸ்டெர்லைட் ஆலையை மூடும் பேச்சுக்கே இடமில்லை

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  ஸ்டெர்லைட் ஆலையை இயக்கிவரும் வேதாந்தா நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் கிஷோர் குமார்  பேட்டி அளித்துள்ளார். அதில்,  ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்கு சட்டப்பூர்வமாக தீர்வுகாண உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார். ஆலையை மூடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கிஷோர்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

கிஷோர்குமாரின் இந்த கருத்துக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வேதாந்தா நிறுவன இயக்குநரின் கருத்து, மனித உயிர்களுக்கும், பல்லுயிர் பெருக்கத்துக்கும் எதிரானது என்று  அவர்கள் தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை, தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் ஆலை எதிர்ப்பு குழுவினர் கூறுகின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,774.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.