Show all

வாட்சன் மற்றும் தோனி மிரட்டல் அடி: 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 30-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் புனே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. டில்லி அணியில் கம்பிர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி சார்பில் ஷேன் வாட்சன் மற்றும் டு பிளிசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதலில் பொறுமையாக ஆடினாலும் 5-வது ஓவரில் இருந்து அதிரடியை தொடங்கினர். சென்னை அணி 10.5 ஓவரில் 102 ரன்கள் எடுத்திருந்த போது டு பிளிசிஸ் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 1 ரன்னில் ஆட்டமிழக்க வாட்சன் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். அதையடுத்து வாட்சன் 40 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 78 ரன்னில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் டெல்லி அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. டோனி 22 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அம்பதி ராயுடு 41 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரின் 5-வது பந்தில் ரன்அவுட் ஆனார். டெல்லி அணி சார்பில் மிஸ்ரா, ஷங்கர் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

அதை தொடர்ந்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி சார்பில் ப்ரித்வி ஷா மற்றும் காலின் முன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ப்ரித்வி ஷா 9 ரன்களிலும், காலின் முன்ரோ 26 ரன்களிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களிலும் மற்றும் மேக்ஸ்வெல் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விஜய் ஷங்கர் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் சிறப்பாக விளையாடினர். ரிஷப் பந்த் 45 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே குவித்ததால் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விஜய் ஷங்கர் 54  ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

சென்னை அணி சார்பில் ஆசிப் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் நிகிடி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 

2018 IPL Team Position
Rank TEAM M W L NRR Points
1 CSK 8 6 2 +0.553 12
2 SRH 8 6 2 +0.514 12
3 KXIP 7 5 2 +0.228 10
4 KKR 8 4 4 +0.110 8
5 RR 7 3 4 -0.751 6
6 MI 7 2 5 +0.033 4
7 RCB 7 2 5 -0.447 4
8 DD 8 2 6 -0.509 4

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.