Show all

மேக் இன் இந்தியா திட்டம் குறித்து மம்தா பானர்ஜி தாக்கு

மேக் இன் இந்தியா என்ற பெயரில் தேசத்தை நடுவண் பாஜக அரசு கூறு போட்டு விற்பனை செய்து வருகிறது என மம்தா பானர்ஜி  தாக்கினார். கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள் விளையாட்டு அரங்கத்தில் திரிணாமுல் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கு வங்க  முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சியின் போது செய்யப்பட்ட  சாதனைகளை நடுவண் பாஜக அரசு சொந்தம் கொண்டாடுகிறது. பாஜக தனது அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ, அமலாக்கத்துறையை ஏவி  விட்டு வருகிறது. எனவே அவற்றை கண்டு தற்போது அனைவரும் பயந்து போய் உள்ளனர். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக சேல் இன்  இந்தியாவை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

 

இந்தியாவைக் கூறு போட்டு விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். இளம் பெண்கள் கன்யா திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு தொடங்கலாம் என்பதை  திரிணாமுல்தான் கொண்டு வந்தது. ஆனால் முகநூல் சுட்டுரை மூலமாக என்னமோ அவர்கள் செய்தது போல கருத்;துப்பரப்புதல் செய்து வருகின்றனர். வேலை  செய்வது நாம். பாராட்டுகளை பெற்றுக் கொள்வது அவர்கள். எனவே இது போன்ற பாஜகவின் செயல்களை அம்பலப்படுத்த வேண்டும். இன்றைக்கு  சூழல் மிகவும் மோசமாக உள்ளது.

 

நீங்கள் நண்பர் என்று நினைத்து எதையாவது பேசிக் கொண்டிருப்பீர்கள் ஆனால் அவர்கள் அதை ரகசியமாக பதிவு செய்து ஒட்டு மொத்தஉரையாடலையும் ஒளிபரப்பி விடுவார்கள். யாரை நம்புவது. சகோதரர், சகோதரிகளுக்கு உள்ளேயே கூட செல்பேசியில் பேச்சுகளைப் பதிவு செய்துமிரட்டும் காலமாக மாறிவிட்டது. எனவே நாரதா சிடி விவகாரம் முழுக்க அரசியல் பிளாக் மெயில் ஆகும். நிச்சயம் இது குறித்து விசாரணைநடத்தப்படும் என்று பேசினார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.