Show all

செயலலிதா வழக்கில் வாதாடியே கோடீசுவரரான கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா

செயலலிதாவை வீழ்த்த தொடுக்கப் பட்ட வழக்கால் கோடீசுவரர் ஆகியுள்ளார் ஒருவர். அவர்தான் கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா!

     செயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான அவருக்கு சம்பளமாக மட்டும் ரூ. 1.06 கோடி அளவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம். தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கில் வாதாடி வந்தவர் பி.வி.ஆச்சார்யா.

     செயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சிறைத் தண்டனை கிடைக்க தலையாய காரணமே இவரது வாதம்தான்.

     கர்நாடகத்தைச் சேர்ந்த தகவல் உரிமை சேவகர் டி. நரசிம்மமூர்த்தி என்பவர் செயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் யாருக்கு எவ்வளவு சம்பளம் தரப்பட்டது என்பது குறித்து தகவல் உரிமை ஆணையம் மூலமாக கர்நாடக அட்வகேட் ஜெனரல் அலுவலகத்தில் கேட்டிருந்தார்.

     இதற்கு அட்வகேட் ஜெனரல் அலுவலகம் அளித்துள்ள பதிலில் கர்நாடக அரசு வழக்கறிஞராக வாதாடிய பி.வி. ஆச்சார்யாவுக்கு சம்பளமாக 1 கோடியே 6 லட்சத்து 86 ஆயிரத்து 18 ரூபாய் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

     இந்த வழக்கில் கர்நாடக அரசு செய்த செலவாக 2 கோடியே 78 லட்சத்து 70 ஆயிரத்து 888 ரூபாய் என்றும் அட்வகேட் ஜெனரல் அலுவலகம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.

     ஆச்சாரியா மீது சொத்துக் குவிப்பு வழக்கு யாராவது போட்டால் அவருக்கும் தண்டனை வாங்கித் தரமுடியும்.

அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் எவனாவது ஒருவன் இழுத்து விடுவான்; இழுத்துக் கொண்டு கிடக்கட்டும் என்று.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.