Show all

செயலலிதா சிகிச்சை அறிக்கை தாக்கல்

மறைந்த முன்னாள் முதல்வர் செயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைபற்றிய விரிவான அறிக்கையை, எய்ம்ஸ் மருத்துவர்கள் தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளனர். தமிழக அரசு, செயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றிய அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு நேற்று கேட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு, ஐந்து அறிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் எய்ம்ஸ் துணை இயக்குநர் ஸ்ரீனிவாஸ், அறிக்கைகளைச்  சமர்ப்பித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.