Show all

ரணில்விக்கிரமசிங்கேவைப் போல வெல்வாரா தினகரன்! அமமுகவிலிருந்து தினகரனைத் தனிமைப் படுத்தும் எடப்பாடி- பன்னீர் முயற்சிகள்

11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா அவர்கள் இருந்த வரையிலான அதிமுக என்பது: கட்சி, மற்றும் ஆட்சி உள்வேலைகளுக்கு சசிகலா அவருக்கு ஒத்துழைக்க அவரது குடும்பத்தார். கட்சி, மற்றும் ஆட்சி வெளி வேலைகளுக்கு செயலலிதா என்பது நடைமுறையாக இருந்தது.

இந்த அதிமுக மீது தொடங்கப் பட்ட இரண்டு பக்க தாக்குதல்கள்: ஒன்று எதிர்க்கட்சியான திமுக, இரண்டாவது ஆளும் நடுவண் அரசில் உள்ள பாஜக. அதற்கு அவைகள் கையில் எடுத்துக் கொண்ட உபாயம் சொத்து குவிப்பு வழக்கு. 

இந்தியாவில் எந்த அரசியல்வாதியிடம் சொத்து இல்லை? வளர வளர சொத்து குவியத்தானே செய்யும். சொத்து இல்லாமல் எப்படி கட்சியை வழி நடத்துவது? இது தமிழ் மக்களின் கேள்வி! இதனால் இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கின் மீது தமிழ் மக்களுக்கு அணுவளவும் உடன்பாடு கிடையாது. தமிழக ஆட்சியை வைத்துக் கொண்டு ஒரு ஆணியும் பிடுங்க முடியாது ; வலிமையான நடுவண் அரசு இயந்திரங்களுக்கு எதிராக நின்று நியாயத்தை வென்றெடுக்க முடியாது ; எனவே நடுவண் அரசை கைப்பற்றியாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் செயலலிதா அவர்கள். அந்த முயற்சியில் நாற்பதும் நமதே என்று நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொண்டார்கள் தமிழ் மக்கள் வெற்றியும் தந்தார்கள். தேசியக் கட்சிகள் என்ற போர்வையில், இருக்கிற பாஜக. காங்கிரசை அப்புறப் படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் செயலலிதா அவர்களைத் தவிர இந்திய அரசியலில் வேறு யாருக்கும் முனைப்பு இல்லாமல் போனது. அதனால் பாஜக ஆட்சியே அமைந்தது.

மீண்டும் அதிமுகவிற்கு அதே இரண்டு பக்கத் தாக்குதல். அதே சொத்துக் குவிப்பு வழக்கு உபாயம். அந்த வழக்;கையே சட்ட ரீதியாக செயலலிதா அவர்கள் முறியடித்து வெற்றி பெற்ற போது, சட்டமே தவறு என்று பேசப் பட்ட வேடிக்கை நிகழ்ந்தது. மீண்டும் அதிமுகவிற்கு தண்டனை வழங்கப் பட்ட போது சட்டம் சரியாக்கப் பட்டு விட்டதாக பதிவானது.

செயலலிதா அவர்கள் இறந்த பிறகு சசிகலா, சசிகலாவோடு செயல்பட்டு வந்த குடும்பத்தார் மட்டும் சொத்துக் குவிப்பு சட்டத்தில் குற்றவாளிகள் ; மற்றபடி செயலலிதா, மற்ற எடப்பாடி, பன்னீர் உள்ளிட்ட அனைத்து அதிமுகவினரும் புனிதர்கள் என்பது சட்டமானது.

சிறைக்கு அனுப்பப் பட்ட சசிகலா, தினகரன் மூலமாக, அதிமுகவை, தமிழ் மக்கள் ஆதரவோடு மீட்டெடுக்க முயல்கிறார்.

இலங்கையில் சிறிசேனவால் பாதுகாக்கப் பட முயன்ற ராஜபக்சே அரசுக்கு எதிராக ரணில்விக்கிர சிங்கே போராடியதைப் போல- 

தமிழகத்தில், நடுவண் பாஜக அரசால் பாதுகாக்கப் பட்டு வரும் எடப்பாடி, பன்னீர் அரசுக்கு எதிராகப் போராடி வருகிறார் தினகரன்.

அங்கே ரணில்விக்கிரம சிங்கேவை தனிமைப் படுத்தும் சிறிசேனா முயற்சியைப் (தோற்றுப் போனது) போல, இங்கே தினகரனைத் தனிமைப் படுத்துவதற்கான எடப்பாடி, பன்னீர் முயற்சி தற்போது அரங்கேறி வருகிறது. தினகரன் பின்னால் நிற்பவர்கள் ரணில் விக்கிரமசிங்கேவிற்கு பின்னால் நிற்றவர்கள் போல உறுதியாக இருப்பார்களா சோரம் போய், சசிகலா தினகரன் மூலமாக அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியைக் குலைப்பார்களா என்பதே தற்போதைய கேள்வி.

அமமுக இணைந்தாலும் தினகரனை மீண்டும் சேர்க்கமாட்டோம் என சென்னையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேலும் பொதுக் கூட்டங்களிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் தினகரனை அமைச்சர்கள் நன்றாக வசைப்படுமாறு எடப்பாடி அறிவுறுத்தியுள்ளார். 

எனவே தினகரன் இல்லாத அமமுகவை தங்களுடன் இணைக்க முடியும் என்ற நம்பிக்கையில் எடப்பாடி- பன்னீரால் காய் நகர்த்தப் பட்டு வருகிறது. எதிர் வரும் நாடளுமன்றத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணிக்காக.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,013.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.