Show all

தீபாவளி கொண்டாடுவதில் தமிழக மரபு வென்றெடுப்பு! பட்டாசு வெடிக்கும் நேர மாற்றத்திற்கு அனுமதித்தது உச்ச அறங்கூற்று மன்றம்

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்கி உச்ச அறங்கூற்று மன்றம் வழங்கியிருந்த தீர்ப்பில் தமிழகத்திற்கு மாற்றம் அனமதிக்கப் பட்டுள்ளது.

இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழக அரசின் சார்பில் நேற்று உச்ச அறங்கூற்று மன்றத்;தில் ஒரு மனு பதிகை செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்தியா பல்வேறு கலாசாரங்கள் அடங்கிய கூட்டாட்சியின் அடிப்படையில் இயங்கும் நாடு ஆகும். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு பகுதி மக்களும் தங்களுக்கான பாரம்பரியம், கலாசாரம், நம்பிக்கை ஆகியவற்றை கொண்டு விளங்குகிறார்கள். வடமாநிலங்களில் தீபாவளி இரவில் கொண்டாடப்படுகிறது. ராமர் போரில் ராவணனை கொன்றதை கொண்டாடும் வகையில் அங்கு கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் வகையில் விடியற்காலையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்த தீபாவளி கொண்டாடுவது வழக்கமாகும். காலையில் தொடங்கும் இந்த கொண்டாட்டம் நாள் முழுவதும் தொடரும். மேலும் தமிழ்நாட்டில் தீபாவளி அமாவாசையன்று சதுர்த்ததி திதியில் கொண்டாடப்படுகிறது. அந்த திதி தீபாவளி அன்று காலை 4 மணிக்கு வருகிறது.

வட மாநிலங்களில் தீபாவளியன்று இரவு விளக்கு ஏற்றுகிறார்கள். தமிழர்கள், கார்த்திகை விளக்குத் திருவிழா என்கிற இயற்கை போற்றும் விழா தனியாகக் கொண்டாடுவதால், தீபாவளி அன்று விளக்கு ஏற்றாமல் கார்த்திகை திருநாளன்று விளக்குகள் ஏற்றப்படுகின்றன. எனவே வடக்கிலும், தெற்கிலும் கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாட்டங்களில் அதிக வேறுபாடு உள்ளது.

மேலும் உச்ச அறங்கூற்று மன்ற உத்தரவின்படி குறைந்த அளவு நேரமான 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஒரே நேரத்தில் அனைவரும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் மாசுக்கேடு விளைவிக்கும்.

எனவே, தீபாவளியின் போது தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் அன்று அதிகாலை 4.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

தமிழகத்திலும்  2 மணி நேரமே பட்டாசு வெடிக்கலாம். எந்த 2 மணிநேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச அறங்கூற்று மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,956.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.