Show all

சித்திரை கணினி மூலம் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள்

04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராமாநாத புரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சித்திரை கணினி  மூலம் ஆண்டு இறுதி தேர்வு எழுதியுள்ளனர்.

தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கூட கிடைக்காத இந்த தொழில்நுட்ப வசதியால் அரசு பள்ளி மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் மட்டமற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கல்வி பயிற்றுவிப்பு முறையை அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு திட்டமாக  தொடக்கபள்ளி மாணவர்களுக்கு சித்திரை கணினி  மூலம் கல்வி கற்பிக்கும் முறையை செயல்படுத்தி உள்ளது.

இதன்படி தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களைச் சேர்ந்த 173 அரசுப் பள்ளிகளில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு சித்திரை கணினி மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு, கரும்பலகை எழுதுகுச்சி, சுண்ணக்கட்டி, எழுதகோல், மைத்தூவல் போன்றவற்றை மட்டுமே உபயோகப்படுத்தி தேர்வு எழுதி வந்த மாணவர்கள், தற்போது சித்திரை கணினி  பயன்படுத்தி தேர்வு எழுதுவதால் மிகுந்த மகிழ்ச்சி யடைந்துள்ளனர். தனியார் பள்ளிகளுக்குக்கூட கிடைக்காத இந்த வாய்;ப்பு தங்கள் பிள்ளைகளுக்கு கிடைத்துள்ளதாக பெற்றோர்கள் பூரிப்படைந்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 351 பேர் தங்களது ஒருபாடத் தேர்வை மட்டும் சித்திரை கணினி மூலம் எழுதியுள்ளனர். இதையடுத்து பிற பாடங்களுக்கான தேர்வுகளையும் புதிய முறையில் நடத்துவதற்கு கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், மனப்பாடம் செய்து ஒப்புவித்தல், எழுதுதல் என்ற வழக்கமான கற்பித்தல் முறையிலிருந்து சற்று மாறி தாங்களாகவே கற்றுக் கொள்ளும் கணினி சார்ந்த கற்பித்தல் முறையால் மாணவர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். 

இது மிக விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த படும் போது அரசு பள்ளிகள்- மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனதில் இடம் பற்றும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,760.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.