Show all

71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 13-வது போட்டியில் டேர்டெவில்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் களமிறங்கினர். சுனில் நரேன் ஒரு ரன்னும், லின் 31 ரன்னும் உத்தப்பா 35 ரன்னும் மற்றும் தினேஷ் கார்த்திக் 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தாலும் நிதிஷ் ராணா மற்றும் ஆந்ரோ ரஸ்ஸெல் அதிரடியாக விளையாடி முறையே 59 ரன்கள் மற்றும் 41 ரன்களும் குவித்தனர். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பில் ராகுல் தெவாதியா 3 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட் மற்றும் கிறிஸ் மாரிஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கொல்கத்தா அணியில் மிரட்டலான பந்து வீச்சால் டெல்லி அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டே இருந்தது. எனினும் ரிஷப் பந்த் மற்றும் மேக்ஸ்வெல் மட்டும் சிறப்பாக விளையாடி முறையே 26 பந்தில் 43 ரன்னும், 22 பந்தில் 47 ரன்னும் எடுத்தனர். இறுதியில் டெல்லி அணி 14.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் கொல்கத்தா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேன் மற்றும் குல்தீப் யாதவ்  தலா 3 விக்கெட்டுகளையும், சாவ்லா, ரசல், சிவம் மற்றும் டாம் கரண் ஆகியோல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

2018 IPL Team Position
Rank TEAM M W L NRR Points
1 SRH 3 3 0 +0.772 6
2 KKR 4 2 2 +0.863 4
3 KXIP 3 2 1 +0.116 4
4 CSK 3 2 1 +0.103 4
5 RR 3 2 1 -0.247 4
6 RCB 3 1 2 -0.373 2
7 DD 4 1 3 -1.399 2
8 MI 3 0 3 -0.174 0

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.