Show all

ஸ்வீடனில் ஒலித்த தமிழ்க்குரல்கள்! மோடியே தமிழகத்தைக் காப்பாற்றுங்கள்

04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக நேற்று ஸ்வீடன் சென்றடைந்தார். இன்று அதிகாலை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தில் மோடிக்கு ஸ்வீடன் நாட்டுப் தலைமைஅமைச்சர் ஸ்டீபன் லோவன் வரவேற்பு அளித்தார். 

வரவேற்பு ஒருபுறம் இருக்க, ஸ்வீடன் வாழ் இந்தியர்கள் பலர் மோடிக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து என இவர்களின் கோரிக்கை பட்டியல் நீள்கிறது. மோடி சுவீடன் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்த நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் தலையாயத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் சிறப்பு என்னவென்றால், தமிழர்களோடு சுவீடன் நாட்டில் வாழும் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்துகொண்டதுதான்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,760.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.