Show all

கோபால் விடுதலை! கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தமிழக ஆளுநரின் நடவடிக்கைக்கு அறங்கூற்று மன்றம் அனுமதி அளிக்க வில்லை

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆளுநரின் துணைச்செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக தேச துரோக வழக்கில் கைதான நக்கீரன் கோபால் மருத்துவ பரிசோதனை முடிந்து ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு சென்னை எழும்பூர் அல்லிக்குளம் அறங்கூற்றுமன்றத்தில் அணியப் படுத்தப் பட்டார்

நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி ஆளுநர் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை அறங்கூற்றுமன்ற காவலில் வைக்க எழும்பூர் அறங்கூற்றுமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன்பின் நக்கீரன் கோபால் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக அறங்கூற்றுத்துறை செயல்பட்டுள்ளது என்று கூறினார். திறமையாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும், இந்து என். ராமுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும் ராஜ்பவன் பற்றிய செய்தியை புலனாய்வு செய்து நக்கீரனில் வெளியிட்டோம் என்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறினார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,935.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.