Show all

தாமிரபரணி மகா புஷ்கரம்! தமிழக விழாக்கள் அனைத்திற்கும் ஹிந்துவா சாயம் பூசிட முயலும் கட்சியான பாஜகவின் அடுத்த நகர்வு

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர், ஆரியர். சிவனியம், மாலியம். சித்தம், வேதம். தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து. சித்தமருத்துவம், ஆயுர்வேத மருத்துவம். தென்மொழி, வடமொழி. திருமணம், கன்னிகாதானம். தெவம், தவம். அறம், தானதர்மம். பூசை, பூஜை. சாதி, ஜாதி. சமயம், மதம். பண்பாடு. கலாச்சாரம். நாவலந்தேயம், பாரதம். ந்தேயா, பாரதம். இப்படி தமிழர்களையும் ஆரியர்களையும் வேறு படுத்த ஆயிரம் ஆயிரம் இணை தலைப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 

உலகினர் ஒட்டுமொத்த இந்தியாவைக் குறிக்க: நாடாக இந்தியா, மதமாக இந்து, என்றனர். இவை நாவலந்தேயம் என்ற சொல்லடியாக பிறப்பிக்கப்பட்ட சொற்களாகும். நாடாக இந்தியா என்ற தலைப்பில் வரமறுத்து பாரதிய ஸ்டேட் பைங், பாரத் ரிசர்வ் பைங், பாரதிய ஜனதா பார்ட்டி, என்று பாரதம் பாரதம் என்றே அடையாளப் படுத்துகிறார்கள் ஹிந்தி மொழியில். 

ஆனால் இந்தியாவிற்கான மதத்;தை மட்டும். ஒட்டு மொத்த இந்திய மக்களையும். பிரம்மாவின் காலில் பிறந்தர்கள் சூத்திரர்கள், பிரம்மாவின் தலையில் பிறந்தவர்கள் பார்ப்பனியர்கள், என்று பாகுபடுத்தி ஆதிக்கம் செய்வதற்குத் தோதாக இந்து என்பதை ஹிந்து என்ற தலைப்பில், சிவனியத்தையும், மாலியத்தையும் ஒருங்கிணைக்க முயல்கிறார்கள்.

அந்த வகையாக தமிழக விழாக்கள் அனைத்திற்கும் ஹிந்துவா சாயம் பூசிட முயலும் கட்சியாக இருக்கிறது பாஜக. அதன் ஒருவகை நகர்வாக, பாஜக அமைப்பான விசுவ இந்து பரிஷத் சார்பில் தாமிரபரணி மகா புஷ்கரம் விழிப்புணர்வு ரதயாத்திரை தொடக்க விழா திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகே நடந்தது. விழாவுக்கு மாநில தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். இந்த ரதயாத்திரையை பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,935.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.