Show all

போலி இணையத்தள கணக்குளை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டுகிறார் பிரியா பவானி சங்கர்

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருப்பவர் பிரியா பவானி சங்கர். இவரது பெயரில் போலி இணைய தள கணக்குகள் உலா வருகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த பிரியா தற்போது விளக்க காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், என் பெயரில் போலி இணைய தள கணக்குகள் நிறைய உள்ளன. அதில் யார் யாரோ என்னைப்போன்று கருத்துக்கள் பகிர்கின்றனர் அவற்றை நம்ப வேண்டாம்.

போலி கணக்கில் வந்த தகவல்களை நான் சொன்னதாக சொல்லாதீங்க. எனது உண்மையான முகவரியை தற்போது வெளியிட்டிருக்கிறேன். அதை அங்கீகாரம் பெற்றதாக மாற்றுவதற்கான வழிமுறைகளையும் நான் தொடங்கியிருக்கிறேன். அதன்வொரு தொடக்கமாகவே இந்த காணொளியை வெளியிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,935.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.