Show all

வழக்கைத் தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் பைக்கில் பயணம் செய்பவர்கள் ஜூலை 1 முதல் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பைக்கில் பின்புறம் இருப்பவர்களும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது

தலைக்கவசம் அணியாமல் பைக்கை ஓட்டுபவர்களின் வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநரின் உரிமங்களைப் போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.

ஆனால், கட்டாய தலைக்கவசத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரனை இன்று உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் விளம்பரத்திற்காக தொடுக்கப்பட்ட வழக்கு என்றும், வழக்கை தொடர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, இந்த  வழக்கை  தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.