Show all

ஷோபா சக்தி, காளீஸ்வரி சீனிவாசன் மீண்டும் ஒரு தமிழ்ப்படத்தில் இணைகிறார்கள்

பிரான்ஸைச் சேர்ந்த இயக்குநர் ழாக்அடியார்ட் இயக்கிய தீபன் படம், கான்ஸ் விழாவின் சிறந்த திரைப்படத்துக்கான, உலக அரங்கில் மிக உயரியதாக கருதப்படும் தங்கப்பனை விருதை வென்றது.

இதில் ஷோபா சக்தி, காளீஸ்வரி சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இந்த இரு நடிகர்களும் மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் இணைய உள்ளார்கள்.

ஷோபா சக்தியுடன் மீண்டும் நடிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். விரைவில் படத்தைத் தொடங்க உள்ளோம். படத்தைப் பற்றி வேறு எதுவும் சொல்லமுடியாது என மும்பை திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நடிகை காளீஸ்வரி சீனிவாசன் தெரிவித்தார்.

ஷோபா சக்தி - காளீஸ்வரி நடிக்கும் படத்தை சிவபுராணம் என்கிற படத்தை இயக்கிய அருண் கார்த்திக் இயக்க உள்ளார். வசந்த் சாயுடனான மற்றொரு படத்திலும் காளீஸ்வரி நடிக்க உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.