Show all

குடும்ப மிடுக்குஅட்டை குளறுபடிகள்

உழவருக்கு வழங்கப்பட்ட மிடுக்குஅட்டையில் குடும்பத் தலைவர் படத்துக்கு பதிலாக விநாயகர் படம் இடம்பெற்றிருந்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த வடுகபாளையம் ஊராட்சி சுங்காரமடக்கு கிராமத்தைச் சேர்ந்த உழவர் நல்லசிவம்(45). இவருக்கு, குடிமைப்பொருள் பிரிவு சார்பில் சமீபத்தில் மிடுக்குஅட்டை விநியோகிக்கப்பட்டது. அதில் குடும்பத் தலைவரின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில், விநாயகரின் படம் இடம்பெற்றிருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், சம்பந்தப்பட்ட குடும்பப் பொருள் விநியோகக் கடையிலும், வருவாய்த் துறை அதிகாரிகளிடமும் முறையிட்டார். இதையடுத்து, எல்காட் மூலமாக அவரது புகைப்படம் அடங்கிய மாற்று அட்டை வழங்கப்பட்டது.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘சென்னையில் இருந்துதான் மிடுக்குஅட்டை அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பப்படுகிறது. எங்கு தவறு நேர்ந்தது என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவருக்கு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து மிடுக்குஅட்டை வழங்கப்பட்டுவிட்டதுஎன்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.