Show all

அதிக வெளிச்சம் காரணமாக கண் பாதிப்பு! 60 மாணவர், பெற்றோர் உட்பட நூற்றுவர் மருத்துவமனையில்

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நேற்று இரவு ஆண்டு விழா நடந்தது. மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் இதில் பங்கேற்றனர். விழாவிற்காக சக்தி வாய்ந்த மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 

விழா முடிந்த நிலையில், இன்று காலையில் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு கண்ணில் வீக்கம், எரிச்சல் ஏற்பட்டுள்ளது. 

 

இதனையடுத்து, 60 மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்கைகாக அனுமதிக்கப்பட்டனர். 

அதிக வெளிச்சம் காரணமாக கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2 நாளில் இது சரியாகிவிடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக ஒளி, ஒலி அமைப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது ஏர்வாடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி தாளாளர் பாலசுப்ரமணியன் என்பவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,730.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.