Show all

அதிகாலையிலேயே படையெடுத்தது ஜெயா தொலைக்காட்சிக்கு வருமானவரித்துறை

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னாள் முதல்வர் செயலலிதா இறப்பைத் தொடர்ந்து தற்போது கட்சி, தினகரன் அணி மற்றும் எடப்பாடி பழனிசாமி அணி என இரண்டு அணிகளாக உள்ளது. கட்சி மற்றும் ஆட்சி எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. ஜெயா தொலைக்காட்சி மற்றும் நமது எம்.ஜி.ஆர் ஆகியவை தினகரனின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. இந்தநிலையில், இன்று காலை ஆறு மணி முதல், வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தச் சோதனையில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர, ஜெயா தொலைக்காட்சிக்குத் தொடர்புடைய மேலும் சில இடங்களிலும் சோதனைகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை தொடர்பான கடைசி கட்ட விசாரணை நடைபெற்றது. அதேபோல, தினகரன் நேற்று பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்திருந்தார். இத்தகைய சூழலில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.

-எந்த யானையை வௌ;ளோட்டம் விடுவதற்காக இந்த மணி ஒலிக்கப் பட்டிருக்கிறது!

தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,601

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.