Show all

மக்கள் மாண்டு விட்டீர்களா இருக்கின்றீர்களா காகித பணமதிப்பழிப்பில்! மோடி கேட்கிறார்

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நரேந்திர மோடி ரூ.1,000, ரூ.500 தாள்களை செல்லாது என அறிவித்து, காகித பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தைக் கருத்தில் கொண்டு,

சிறப்பாக சென்னை, கோவை, ஈரோடு, சிவகாசி, திருப்பூர் மாவட்டங்களில் புதிது புதிதாக வளர்ந்து வரும் தொழில் அதிபர்களைக் கருத்தில் கொண்டு,

தற்போதைய நிலையிலேயே தமிழகமே உலகத்திற்கு இந்தியாவின் வாயிலாக அறியப்படுகிற அச்சத்தைக் கருத்தில் கொண்டு,

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழை மட்டும் ஒழிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தைக் கருத்தில் கொண்டு,

தொழிலில் நசிந்து போனாலும் பெண்கள் தம் அஞ்சறைப் பெட்டியில் உள்ள சேமிப்பை எடுத்துக் கொடுத்து தமிழகத்தைத் தூக்கி நிறுத்துகிற பாங்கை கருத்தில் கொண்டு,

தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத்தீவை அயலவனுக்குத் தாரை வார்த்து கொடுத்தாலும் விடாது கடலோடும் தமிழக மீனவர்கள் துணிச்சலைக் கருத்தில் கொண்டும்,

பீட்டவைத் தூண்டி தமிழர் பண்பாட்டை அழிக்க முயன்றாலும் ஒட்டு மொத்த தமிழகமே வெகுண்டெழும் முயற்சியைக் கருத்தில் கொண்டு,

அணுஉலை, மீத்தேன் என்று எந்த தமிழர் வீழச்சிக்கான முயற்சியில் ஈடுபட்டாலும் போராடும் தமிழன் விழிப்புணர்ச்சியைக் கருத்தில் கொண்டும்

தமிழன் அடிமடியிலேயே கைவைப்பதற்கும், உலகம் புரிந்து கொள்ளாமல் இருக்க எந்தத் தலைப்பில் முன்னெடுப்பது என்பதை அறைபோட்டு சிந்தித்தெடுத்த மோடியின் முடிவு-

காகிதப்பணமதிப்பழிப்பு!

கருப்பு பணத்தை ஒழித்துக்கட்டவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், பயங்கரவாதத்துக்கு செல்கிற நிதியை தடுத்து நிறுத்தவும் எனும் காரணம்!

புரிந்தோ புரியாமலோ 18 கட்சிகள் நேற்று கருப்பு நாள் கடைப்பிடித்தன. இது தொடர்பாக அவர்கள் பல்வேறு வகையிலான போராட்டங்களை நடத்தினார்கள்.

தமிழன் அடிமடியிலேயே கைவைப்பதற்கும், உலகம் புரிந்து கொள்ளாமல் இருக்க எந்தத் தலைப்பில் முன்னெடுப்பது என்பதை அறைபோட்டு சிந்தித்தெடுத்து நடைமுறைப்ப படுத்;;;;திய முடிவின் நிலையறிய மோடிக்கொரு விருப்பம்-

நாட்டு மக்களிடம் இணையதளம் வழியாக ஒரு கருத்துக்கணிப்பு நடத்துகிறார். ரூபாய் தாள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு, இந்த கருத்துக்கணிப்பில் பதில் அளிக்குமாறு அவர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கீச்சுப் பதிவில், ‘ஊழலையும், கருப்பு பணத்தையும் அடியோடு ஒழித்துக்கட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த கருத்துக்கணிப்பு வாயிலாக எனக்கு சொல்லுங்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,601

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.