Show all

தமிழகத்தில் 1025 வழக்கறிஞர்களுக்கு, சட்டக்குழு இடைக்கால தடை

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வழக்கறிஞர் தகுதி தேர்வில் வெற்றி பெறாத, 1025 வழக்கறிஞர்களுக்கு, சட்டக்குழு இடைக்கால தடை விதித்துள்ளது. அவர்களை, தற்காலிக நீக்கம் செய்து, சட்டக்குழு உத்தர விட்டுள்ளது.

சட்டப் படிப்பு முடித்து, வழக்கறிஞராக, சட்டக்குழுவில் பதிவு செய்தாலும், சட்டக்குழு நடத்தும் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். தமிழ்தொடர்ஆண்டு-5112ல் (2010) இந்த தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது. தகுதி தேர்வு போல், ஒவ்வொரு ஆண்டும், இந்தத் தேர்வை, சட்டக்குழு நடத்துகிறது. சட்டக்குழுவில்; பதிவு செய்த, இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அவர்கள் தேர்ச்சி பெறும் வரை, வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட முடியாது.

தற்போது, வழக்கறிஞர் தகுதி தேர்வின் முடிவுகள், சட்டக்குழுவுக்கு வந்துள்ளன. அதை தொடர்ந்து, தேர்ச்சி பெறாத, 1025 வழக்கறிஞர்களை, தற்காலிக நீக்கம் செய்து, சட்டக்குழு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு சட்டக்குழு செயலர், சி.ராஜகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

வழக்கறிஞர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெறாத, 1025 வழக்கறிஞர்கள், தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்ச்சி பெறாமல், யாராவது வழக்கறிஞராக தொழில் புரிந்தால், சட்டக்குழுவில் இருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அறிவிப்பை, அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,601

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.