Show all

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி!

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி! திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி. திங்கட் கிழமை நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும்,  திமுக சார்பில் கதிர்ஆனந்தும், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் உள்பட 28 பேர்களும் போட்டியிட்டனர். 

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருந்தது. இறுதி சுற்று முடிவின் போது கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
கதிர் ஆனந்த் - திமுக - 4,85,340
தீபலட்சுமி - நாம்தமிழர் கட்சி - 26,995
ஏ.சி.சண்முகம் - அதிமுக - 4,77,199 
திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் 2.62 விழுக்காடு வாக்குகள் பெற்று, தமிழகத்தில் படிப்படியாக வளரும் கட்சியாக முன்னேறி வருகிறது. வெற்றி வாகை சூடிய திமுக 47.33 விழுக்காடு வாக்குகளை பெற்று தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. பாஜக தயவில் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் எடப்பாடி பன்னீர் அதிமுக 46.49 விழுக்காடு வாக்குகளை பெற்று, மக்கள் புறக்கணிப்பில் ஆட்சியைத் தொடர்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,239.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.