Show all

புதிய தமிழகம் கட்சி அணியினருக்குள் மோதல்! திருச்சி பாராளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்

திருவெறும்பூர் பெல் வளாகத்தில் நடந்த திருச்சி தொகுதி தேமுதிக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் இடையே அணி மோதல் ஏற்பட்டது. இரு அணியினரும் இருக்கைகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் ஏடிபி தொழிற்சங்கத்தில் நடந்தது. கூட்டத்தில் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டம் முடிந்ததும் புதிய தமிழகம் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பிச்சைமுத்து அணியினருக்;கும், அந்த கட்சியின் ஒன்றிய செயலாளர் ரஞ்சித் அணியினருக்கும் இடையில் மேடையில் அமர்வதற்கு இடம் ஒதுக்கியது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இரு அணியினரும் இருக்கைகளை எடுத்து வீசி கொண்டனர். பின்னர் கூட்ட அரங்கை விட்டு வெளியில் வந்தும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,102.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.