Show all

யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னை இடம் பெறுகிறது.

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாரம்பரிய இசை பங்களிப்பிற்காக யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கமாக யுனெஸ்கோ திகழ்ந்து வருகிறது. இது கைவினைப் பொருள்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை, நகர வடிவமைப்பு, திரைப்படம், உணவியல், (உணவைத் தேர்ந்தெடுத்தல், சமைத்தல் மற்றும் உண்ணுதல்), இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என 7 பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு செய்யும் நகரங்களை படைப்பாக்க நகரம்; என்று அங்கீகாரம் அளிக்கிறது.

அதன்படி, பாரம்பரிய இசைக்கு சென்னை அளித்து வருவதை கருத்தில் கொண்டு படைப்பாக்க நகரப் பட்டியலில் சென்னையையும் யுனெஸ்கோ அமைப்பு சேர்த்தது.

தற்போது வரை உலகம் முழுவதும் உள்ள 72 நாடுகளைச் சேர்ந்த 180 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தைத் தவிர ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், வாரணாசி உள்ளிட்ட இந்திய நகரங்கள் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

திரைப்பட நடிகர் கமல் யுனஸ்கோவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,600

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.