Show all

பணமதிப்பு நீக்கத்திற்கு சொல்லப்பட்ட காரணம் வேறு! நோக்கம் வேறு

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழர் இன்றைய இருப்போ தமிழர்இயலாக இல்லாமல், அவரவர் வாழ்மானத்திற்காக-

உடல்உழைப்பு கூலியாகவோ நிருவாகக்கூலியாகவோ அவரவர் சார்ந்திருக்கும்,

அராபிய

ஆரிய

ஐரோப்பிய

மார்க்சிய

பல்வேறுமத அடிப்படையாக

அந்த ஒவ்வொரு அமைப்புகளுக்குள்ளும் பல்வேறு குழுக்களாக

பல்வேறு இருப்புகளாக அமைந்து கிடக்கிறோம்.

ஒவ்வொரு தமிழனும்,

தான்-

முதலாளியாக,

ஆட்சியாளனாக,

வணிகனாக,

கலைஞனாக,

படைப்பாளியாக,

அறங்கூற்றாளனாக,

நிதியாள்பவனாக,

கல்வியாளனாக,

மொத்தத்தில் உடைமையாளனாக

தம்இயல் நிறுவு முயற்சியில் களமிறங்கியாக வேண்டும்.

எந்த அயல்இயல்களை

உடைமை தளத்தில் நிறுத்தினாலும்

நாம் உரிமைக்காக எத்தனை காலமும் போராடிக் கொண்டுதான் இருக்கவேண்டும்.

உடைமைத்தளத்தில் இயங்குவது கடினமானதுதான்

ஆனால்

நிலையானது.

கூலித்தளத்தில் இயங்குவதற்கு பெரிய பொறுப்பு தேவையில்லைதான்

ஆனால்

அது நிலையானது இல்லையே!

அராபியர், ஆரியர், ஐரோப்பியர் வரவால்,

தமிழர் அவர்களிடம் நம் அனைத்து அடிப்படை உடைமைகளையும் விட்டுக் கொடுத்து விட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக உரிமைக்காக மட்டும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

பகுத்தறிவு என்பது...

ஐரோப்பிய மலைப்பில்,

பழந்தமிழர் அறிவை-

நம் வரலாற்றை-

உளவியல், மருத்துவம், கணியம், வானவியல், எண்கள், கிழமைகள், தமிழ்த் தொடர் ஆண்டுக் கணக்கு, கட்டிடவியல், வேளாண்மை, பாசனவியல் போன்ற எண்ணற்ற நம் இயல்களையெல்லாம்-

குழி தோண்டி புதைக்கிற மூடத்தனம்!

மார்க்சியம் என்பது...

உரிமைப் போரட்டத்திற்கான உலகளாவிய கூலித்தளம்.

போராடுவது மட்டுமே நோக்கமாக எவன் வேண்டுமானாலும் உடைமையை எடுத்துக் கெண்டு போகட்டும் என்று,

பணத்தின்-உடைமையின் மீதான தீண்டாமையைக் கட்டிக்காப்பது.

இன்றைக்கு மோடியின் செயல்பாடுகள்....

மோடியின் ஒவ்வொரு சிறிய செயல்பாடும் பாஜக பரிவாரங்கள் வகுத்துக் கொடுத்த அவர்கள் கட்ட முயலும் பாரத தேசத்தில் நடுவண் அரசை உடைமை கட்டுமானமாக மாற்றும் முயற்சியே.

தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலங்களுக்கும் எந்த உடமைகளும் கிடையாது; உரிமைகள் மட்டுமே; மாநிலங்கள் போராடிக் கெண்டே இருக்க வேண்டும்.

உடைமை என்பது சொந்த வீடு.

உரிமை என்பது வாடகை கொடுத்து குடியிருப்பதற்கான அனுமதி.

ஆட்சி

வணிகம்

கலை

படைப்பு

அறங்கூற்று

நிதி

கல்வி என்பதெல்லாம் உடைமை.

அவைகளிலெல்லாம்

இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு, நிருவாக வாய்ப்பு, என்பனவெல்லாம் நமது 58 அகவை வரைக்குமான தற்காலிக அனுமதி. நம் சந்ததிகளுக்கு உதவாது.

உடைமை! நிலையானது. நமக்கு மட்டுமல்ல நமது ஏழேழு தலைமுறைக்கும் தொடரக் கூடியது.

குறைந்த பட்சம் இருபது விழுக்காடு தமிழனாவது உடைமையின் பெருமையுணர்ந்து உடைமை மீட்பு முயற்சியில் ஈடுபட்டால் தாம் தமிழன் மீள்வான்.

அதுவரை-

தமிழ் மக்களின், எந்தத் தலைவனின், எப்படியான வேறுவகை முயற்சியும் விழலுக்கிறைத்த நீரே.

எனதருமை நண்பர்களே, இன்று இரவு முதல் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது. இதனால், சாமானியர்கள் நிறைய கஷ்டங்களைச் சந்திக்கவேண்டி வரும். ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதற்குச் சாமானியர்கள் இந்தக் கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். குடிமக்கள் எப்போதும் நாட்டுக்காகத் தியாகங்களைச் செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். நாட்டைச் சுத்தப்படுத்துவதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். விரைவில் இதன் பயனைக் குடிமக்கள் அடைவார்கள்

கடந்த ஆண்டு இதேநாளில் நாட்டு மக்களுக்கு நரேந்திர மோடி ஆற்றிய உரை.

இதோ, பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு காலம் நிறைவடைந்துவிட்டது. எளிதில் மறக்க முடியாத நிகழ்வு அது. ஒட்டுமொத்த இந்தியாவும் அதன் நேரடித் தாக்கத்தை உணர்ந்தது. கிட்டத்தட்ட புழக்கத்தில் இருந்த 85விழுக்காடு ரூபாய் தாள்கள் செல்லாது என்று ஒரே இரவில் அறிவிக்கப்பட்டது.

கள்ளநோட்டுப் புழக்கத்தை ஒழிப்பது, கறுப்புப் பணத்தை ஒழிப்பது, தீவிரவாதத்துக்கு வரும் நிதியை ஒழிப்பது என்று மோடியால் மூன்று தலையாய காரணங்கள் முன்வைக்கப் பட்டன.

கடந்த ஓராண்டில் இந்த இலக்குகள் எட்டப்படவில்லை என்பது மடடுமல்ல,

இந்நடவடிக்கை சாமானிய மக்களை எந்த அளவுக்குப் பாதித்துவருகிறது என்பதைப் பார்க்கும்போது, அடுக்கப் பட்ட காரணங்கள் உண்மையல்ல என்று உணர முடிகிறது.

திருப்பூரைச் சேர்ந்த முருகேசனின் கதை ஓர் உதாரணம். பெரிய நிறுவனத்திடம் குத்தகை எடுத்து உபதொழில் பார்த்துவந்தவர் அவர். அவரிடம் 10 பேர் பணிபுரிந்துவந்தனர். பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் அவரது தொழில் முடங்கிவிட்டது. வருமானம் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார். திருப்பூரில் பெரிய அளவிலான ஆடை நிறுவனங்களை விட உபதொழில் சார்ந்த தொழில் நிறுவனங்களே அதிகம். ‘பட்டன்வைப்பது, ‘ஸ்டிக்கர்ஒட்டுவது என்று கிட்டத்தட்ட 1,200 சிறு நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. அத்தனை நிறுவனங்களும் மீள முடியாத அளவுக்கு அடிவாங்கியிருக்கின்றன.

 

பெரிய நிறுவனங்கள் தங்களது ஏற்றுமதிக்கான தொகையைப் பணமில்லாப் பரிவர்த்தனை மூலமாகப் பெற்றாலும் இதுபோன்ற உபதொழில்களுக்கு ரொக்கப் பரிவர்த்தனை மூலமாகவே பணத்தை அளித்துவந்தன. ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும். எல்லாம் தினக் கூலிகள். அன்றன்றைக்கு ஊதியம் வழங்க வேண்டும். பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, ரொக்கத் தட்டுப்பாடு அதிகரித்தது. பெரிய நிறுவனங்கள் இந்த உபதொழிலுக்கு ரொக்கமாகப் பணத்தை வழங்க முடியவில்லை. இதன் காரணமாக ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானவர்களுக்கு தொழில் பறிபோனது. அதன் தாக்கம் இன்று வரை தொடர்கிறது.

இதோ, ஒரு தொழில்முனைவோராகத் தன்னை உருவாக்கிக்கொள்ள முயற்சித்த முருகேசன், இன்று ஒரு பெரிய நிறுவனத்தில் மாதம் ரூ.10,000 ஊதியத்துக்குப் பணிபுரிந்துவருகிறார்.

ஆக மோடியின் நோக்கம் உடைமையைப் பிடுங்கி வளர முற்படுகிறவர்களைக் கூலிக்காரர்கள் ஆக்கவது தானே! அது நன்றாகவே நடந்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,600

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.