Show all

குடும்ப அடையாள அட்டைகளுக்கு இனி புழுங்கல் மற்றும் பச்சரிசி 70:30 என்ற விகிதத்தில் வழங்கப்படும்

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக அரசின் பொது விநியோகத் துறையின் கீழ் வரும் குடும்ப அட்டைகளு;க்கான பொருள்கள் வழங்கும் கடைகளில் அரிசி வழங்கும் முறையில் புதிய மாற்றம் கொண்டு வந்து தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் நுகர்பொருள் வாணிகத் துறையின் முதுநிலை மேலாளரிடம் இருந்து கிடங்கு பொறுப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசின் நுகர்பொருள் வாணிகத் துறைக்கு இந்திய உணவுக்கு கழகத்திடம் இருந்து அரிசியானது 70:30 என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. அதாவது 70விழுக்காடு புழுங்கல் அரிசியும், 30விழுக்காடு பச்சரிசியும் வழங்கப்படுகிறது. எனவே இதே விகிதத்திலேயே நுகர்வோருக்கும் வழங்குமாறு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதன் மூலம் இனி குடும்ப அட்டையின் மூலம் 20 கிலோ அரிசி பெறும் ஒரு வாடிக்கையாளருக்கு அதில் 14 கிலோ புழுங்கல் அரிசியும், 6 கிலோ பச்சரிசியும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,614

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.