Show all

பல்கலைக்கழகம் வழங்கிய மதிப்பெண் சான்றிதழில் மாணவருக்கு பதிலாக சல்மான்கான் புகைப்படம்

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரபிரதேச மாநிலம் அலிகார்க் மாவட்டம் ஜாவாவில் உள்ள அம்ராதா சிங் மெமோரியல் கல்லூரியில் கலைஇளவல் ஆங்கிலம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவருக்கு ஆக்ரா பல்கலைக்கழகம் வழங்கிய மதிப்பெண் சான்றிதழில் இந்தி நடிகர் சல்மான்கான் புகைப்படம் இடம்பெற்று உள்ளது. சல்மான் கான் புகைப்படம் அடங்கிய மதிப்பெண் சான்றிதழின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வங்கப்பட்ட போதுதான் சல்மான் கான் புகைப்படம் இடம்பெற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஆக்ரா டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் டாக்டர் கிரிஜா சங்கர் பேசுகையில், இவ்விவகாரம் தொடர்பாக எந்தஒரு புகாரும் பெறப்படவில்லை, இவ்விவகாரம் எங்களுடைய பார்வைக்கு கொண்டுவரப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மதிப்பெண் சான்றிதழில் சம்பந்தப்பட்ட மாணவரின் பதிவு எண் இடம்பெற்று உள்ளது, ஆனால் புகைப்பட பகுதியில் மட்டும் சல்மான் கான் படம் இடம்பெற்று உள்ளது. இதில் பல்கலைக்கழகத்தின் தவறு எதுவும் கிடையாது என மறுத்து உள்ள கிரிஜா சங்கர், நாங்கள் எங்கள் தரப்பு ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்துவிட்டோம், அவை சரியாகவே உள்ளன என கூறிஉள்ளார். புகைப்படத்தை ஒட்டி மாணவர்கள் விண்ணப்பத்தைச் சமர்பிப்பார்கள், அவற்றை கல்லூரியின் முதல்வர் சரிபார்த்து எங்களுக்கு அனுப்புவார், அதனைக் கண்காணிப்பார்கள் பார்வையிடுவார் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,614

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.