Show all

தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டியது கட்டாயம்! நாளை போகித்திருநாள்.

பாஜக அரசின் பணமதிப்பு நீக்கத்தால் ஏமாற்றமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. செல்லாத பணத்தை தூக்கி வீசிவிட்டு, அரங்கத்திற்கு வராமலே புலம்பிவிட்டு அமைதியாகிவிடுகின்றவர்கள் பலர். சிலர் அரங்கத்திற்கு வந்து, ஈராமற்ற நமது நெஞ்சை பரிதவிக்க வைக்கிறார்கள். தற்போது அரங்கத்திற்கு வந்து நம்மை துணுக்குற வைத்திருப்பவர் 70 அகவை மூதாட்டி புவனேஸ்வரி.

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மார்கழி மாதத்தின் இறுதி நாளில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர் போகித் திருவிழாவை, தூய்மைத் திருவிழாவாகக் கொண்டாடி வருகிறோம். விழாமல் இருப்பதற்கு விழா என்று, வணிக நோக்கத்தை சமுதாய நோக்கமாக முன்னெடுக்கும் உலகின் ஒரே இனம் தமிழினம். இதில் உடைந்து வீணாகிப்போன பழைய பொருட்களை ஒழித்து புதிய பொருட்களை வாங்குவதற்கு திட்டமிடுகிற நாளாக போகி கொண்டாட்டம் அமைகிறது. 
 
இந்த நாள், பழையன கழித்து புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது. இங்கேதான் ஆரியருக்கு, தமிழர் இன வராலாற்றை தொலைத்துக் கட்டுவதற்கான ஒரு வாய்ப்பு கிட்டியது. தமிழர்தம் பரண்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகளை யெல்லாம் எரிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லி, ஏராளமான தமிழர் இலக்கியங்களை அழித்தொழிக்க வித்திட்டனர் ஆரியர்கள். தமிழர்களே இந்தப் போகியை கவனமாகக் கையாளுங்கள். எந்தப் பொருளையும் வேண்டாம் என்று கழிக்க ஒரு முறைக்கு நூறு முறை யோசியுங்கள். அது வரலாற்றை பறைசாற்றும் ஆவணமாக அமையலாம். கவனமாக தேவையில்லாததைத் தேர்ந்தெடுங்கள்.

நாளை வீட்டை தூய்மைப் படுத்தி, பொருட்களை முறையாக அடுக்கி வைத்து, புதிய பொருட்களுக்கு இடம் ஒதுக்குவது எல்லாம்செய்யும் நாளாகும். மாலையில் வீட்டிற்கு பீளைப்பூ, ஆவரைப்பூ, வேம்பு கொண்டு காப்பு கட்டுவார்கள். 

போகித்திருவிழா வீட்டைத் தூய்மைப்படுத்துதல், பொருட்களைச் சீர் படுத்துதல், காப்புக்கட்டுதல் ஆகிய நிகழ்வுகளோடு நிறைவுறும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,396.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.