Show all

தமிழகப் பெண்களிடம் விழிப்புணர்வு குறைந்து விட்டது! பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் உணர்த்தும் செய்தி

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் உணர்த்தும் செய்தி: தமிழகப் பெண்களிடம் விழிப்புணர்வு குறைந்து விட்டது என்பதுதாம். 1.செல்பேசி ஆபத்தானது 2.சமூக வலைதளக் கணக்குகள் ஆபத்தானவை 3.அரசு இணையத்தை கட்டுப் படுத்த வேண்டும் 4.பெண்கள் வெட்கத்தை விட்டொழிக்க வேண்டும் என்று எந்த ஒன்றையும் தூக்கியெறிய வலியுறுத்துவதை, சொல்கிறவர்கள் எளிதாக சொல்லி விட்டு போய் விடலாம் நடப்பில் சாத்தியமில்லை. 

பாலியலை நெறிப்படுத்த திருமணம் என்பது தமிழர் உலகிற்கு வழங்கிய கொடை. இன்றைக்கு அந்தத் தமிழகமே பாலியல் விவகாரத்தில் சிக்கி சின்னா பின்னமாவது பேரவலம்.

திருமணம், குடும்பம் தமிழர் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கட்டமைத்து போற்றி வரும் அமைப்பு முறைகளாகும். இன்றைக்கு குடும்ப அடையாள அட்டை போய் ஆதார் அட்டை வந்து விட்டதே தமிழர் வீழ்ச்சியின் ஓர் அங்கம்.

தமிழர்தம் குடும்பங்கள்- தொழில் செய்தே பிள்ளைகளைப் படிக்க வைத்தும், திருமணம் செய்வித்தும், தொழில் அல்லது வேலை அமைத்துக் கொடுத்தும், நாட்டுக்கு வரி செலுத்தி, சாலைக்கு சுங்கம் செலுத்தி நாட்டையும் காப்பாற்றுகிற போது,

நாடோ தன்னை வாழவைக்கும் தமிழ்க் குடும்பங்கள் மீது கொஞ்சமும் பொறுப்பு இல்லாமல், 

அரசு: தொழிலும் நடத்திக் கொண்டு, மக்களின் தொழில் வருமானத்தில் வரியும் வாங்கிக் கொண்டு, மக்களைச் சீரழித்து வருமானம் பெற சாராயக் கடையும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆடவனையும் சான்றோனாக வளர்த்தெடுப்பது பெற்றோர்களுக்கான பெருஞ்சிக்கல். நல்ல காதலனை, கணவனைத் தேர்வதும் நயவஞ்க ஆடவர்களை அடையாளம் கண்டு சமூகத்தில் இருந்து தற்காத்துக் கொள்வதும் தமிழகப் பெண்களுக்கு இருக்கிற பெரிய பொறுப்பாகும்.

இந்த நிலையில் தாம் பொள்ளாச்சியில் சில நயவஞ்சக நாய்களிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகியிருக்கின்றனர் தமிழகப் பெண்கள்.

தமிழகப் பெண்களே! எந்த ஆணையும், அவன் தாய், அவன் அக்கா, தங்கை யார் என்று தெரியாமல் அங்கிகரிக்காதீர்கள். ஐயம் ஏற்பட்டால் அவனுடைய குடும்ப அடையாள அட்டையைக் கேட்டு வாங்கி ஆய்வு செய்யுங்கள் ஒன்றும் பிழையில்லை. உங்களுக்கு பாலியலாக எந்த சிக்கலும் வரவேவராது. 

நீங்கள் செல்பேசியை தூக்கி எறியவெல்லாம் வேண்டாம். சமூக வலைதளக் கணக்குகளைப் புறக்கணிக்கவெல்லாம் வேண்டாம். அரசு- இணையத்தைக் கட்டுப் படுத்தக் காத்துக் கொண்டிருக்கவும் வேண்டாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,092. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.