Show all

காமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் 10 தங்கத்துடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது இந்தியா

ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் தடகள போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்தியா இதுவரை 10 தங்கம், 4 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இதுவரை (09 ஏப்ரல்) பதக்கம் வென்ற வீரர்களின் விவரங்கள்:
05 ஏப்ரல்:

  • சாய்கோம் மீராபாய் சானு - 48 கிலோ எடை பிரிவில் பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
  • குருராஜா பூஜாரி - ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் 56 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

06 ஏப்ரல்:

  • சஞ்சிதா பானு - 53 கிலோ எடை பிரிவில் பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
  • தீபக் லாதர் -  69 கிலோ எடை பிரிவில் ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

07 ஏப்ரல்:

  • சதிஷ் சிவலிங்கம் - 77 கிலோ எடை பிரிவில் ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
  • வெங்கட் ராகுல் - 85 கிலோ எடை பிரிவில் ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

08 ஏப்ரல்:

  • பூனம் யாதவ் - 69 கிலோ எடை பிரிவில் பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
  • மனு பாகெர் - பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
  • பெண்கள் டேபிள் டென்னிஸ் அணி - பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்கள்.
  • ஹீனா சித்து - பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
  • ரவிக்குமார் - ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
  • விகாஸ் தாகூர் - 95 கிலோ எடை பிரிவில் ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

09 ஏப்ரல்:

  • ஜித்து ராய் - ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
  • ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணி - ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்கள்.
  • பேட்மிட்டன் அணி - கலப்பு பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்கள்.
  • பிரதீப் சிங் - 105 கிலோ எடை பிரிவில் ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
  • மெஹலி கோஷ் - பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
  • மிதர்வால் - ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
  • அபூர்வி சண்டேலா - பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.