Show all

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்! தினகரனின் தொலைநோக்கு

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தினகரன் அவர் எடுத்துக் கொண்ட செயலில், போற்றுவார் போற்றட்டும்! தூற்றுவார் தூற்றட்டும் என்று தனி இராணுவமாக இயங்கக் கூடிய ஆற்றல் பெற்றவர். செயலலிதா அவர்களுக்கு தினகரனிடம் பிடித்த தகுதியும் இதுதான்.

செயலலிதாவால் அதிமுகவில் அங்கிகரிக்கப் பட்ட தொடக்க காலத்தில் செயலலிதாவின் வாரிசாகவே கருதப் பட்டவர்தான் தினகரன்.

தினகரன் ஒரு முடிவு எடுத்து விட்டால் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார். 

சசிகலா தினகரனுக்குக் கொடுத்த பொறுப்பு- வஞ்சகமாக நான் தண்டிக்கப் பட்டிருக்கிறேன். நான் சிறையில் இருந்து வரும் வரை அதிமுகவை எட்டப்பர்கள் கைப்பற்றாமல் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் அது.

ஆனால் பாஜகவின் வஞ்சகத்தில் எட்டப்பர்களோடே சோரம் போய்விட்டார் எடப்பாடி.  

கடந்த வியாழன் மதுரை மேலூரில், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற அமைப்பை தினகரன் தொடங்கினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மீட்டெடுக்கும் வரையில், அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் இயக்கமாக நாம் தொடர்ந்து பயணிக்கவே இந்த இயக்கம்’ என்று விளக்கம் கொடுத்தார் தினகரன். 

இந்நிலையில் தினகரனின் புதிய கட்சித் தொடக்கவிழாவைப் புறக்கணித்த நாஞ்சில் சம்பத் தற்போது தினகரன் அணியிலிருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று காலை மணக்காவிளையில் தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த நாஞ்சில் சம்பத், தினகரனின் செயல்பாடுகள் திராவிடக் கொள்கைக்கு எதிராக இருக்கின்றன. திராவிடத்தை அழிக்கும் விதமாகத் தினகரன் செயல்படுகிறார். திராவிடம் இல்லாத தமிழகம் என்ற திட்டத்துடன் இயங்கும் வகுப்புவாத சக்திகளுக்கு தினகரன் அடிபணிந்துவிட்டார் என்ற சந்தேகம் இருக்கிறது. இனி நான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை. ஒரு தலைவன் ஒரு கொடிக்கு கீழே இருக்க விரும்பவில்லை. அதனால், தினகரன் அணியிலிருந்து விலகிக்கொள்கிறேன். இனி, இலக்கிய மேடைகளில் பேச இருக்கிறேன். இளைஞர்களுக்காகத் தமிழ் பயிற்சிப் பட்டறை தொடங்கப்போகிறேன் என்றார். 

நாஞ்சில் சம்பத்தின் இந்த முடிவு, தினகரன் அணியில் இருக்கும் அவரின் நெருங்கிய நண்பர்களுக்கு அதிருப்தியளித்துள்ளது. இதுகுறித்து தினகரன் ஆதரவாளரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளருமான வழக்கறிஞர் காசிநாத பாரதி பேசுகையில், தற்போது தொடங்கப்பட்ட அமைப்பு தனிப்பட்ட இயக்கம் என்பது நாஞ்சில் சம்பத்துக்குத் தெரியும். டெல்லி உயர் அறங்கூற்று மன்றத்தின் ஆணையின் அடிப்படையில்தான் நாம் புதிய அமைப்பு என்பதை தொடங்குகிறோம். ஒருவேளை புதிய கட்சியைத் தொடங்குவதாக இருந்தால் நேரடியாகத் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருந்தாலே போதுமானது. அறங்கூற்றுமன்றத்தின் அனுமதி தேவையில்லை. ஏதோ ஒரு காரணத்துக்காகத் தமிழகத்தில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருக்கும் 50 லட்சம் இளைஞர்களும் தினகரனுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். இது வெளிப்படையான உண்மை.

ஒரு மாநாட்டுக்காக மூன்று நாட்களுக்குள் ஏறக்குறைய மூன்று லட்சம் தொண்டர்களைக் கூட்டியிருப்பது தினகரனின் வல்லமையைக் காட்டுக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினே தினகரனைப் பார்த்து பயந்து எடப்பாடி பழனிசாமியைச் சென்று சந்தித்தார்.  ஒட்டுமொத்த திராவிட கட்சியும் தினகரன் பின்னால் அணிவகுத்து நிற்கிறது. இப்படி ஒரு நல்ல நேரத்தில் நாஞ்சில் சம்பத் இயக்கத்தைவிட்டு விலகுவது வருத்தம் அளிக்கிறது. அவருக்கு உரிய தலையாயத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கொடுக்கப்படவில்லை என்று அவர் கருதுகிறார். அவரின் முடிவை அவர் மறுபரீசீலனை செய்ய வேண்டும். நாங்கள் நாஞ்சில் சம்பத்தின் தமிழுக்காக அவரை பின் தொடர்ந்தோம். இனி பின் தொடர முடியாத சூழல் உருவாகிவிட்டது. மேலும், கண்டிப்பாக தினகரன் திராவிட இயக்கத்தின் தலைவராகவும் தமிழக முதல்வராகவும் வருவார் என்று நம்பிக்கை இருக்கிறது. நடுவண்;அரசில் ஆளும் பா.ஜ.க அரசை எதிர்க்கும் தலைமையாகத் தினகரன் திகழ்வார். 

இது ஒரு இடைகால அமைப்பு என்பதால் திராவிடம் என்ற பெயரைச் சேர்க்கவில்லை. திராவிடம் என்று பெயர் வைத்துவிட்டால் இது ஒரு தனிக் கட்சியாகத் தெரியும். இதன்மூலமாக உள்ளாட்சி தேர்தலில் இடங்களைப் பிடிக்கும்போது  அ.தி.மு.க-வும் இரட்டை இலைச் சின்னமும் நம் கையில் கிடைக்கும். டெல்லி உயர் அறங்கூற்றுமன்றத்தில் நாம் தொடுத்திருக்கும் வழக்கின் சாரம்சமும் இதுதான். நாஞ்சில் சம்பத் வேறு எந்த அரசியல் இயக்கத்துக்கும் போக மாட்டார். அவரின் நோக்கம் அது இல்லை என்று நம்புகிறேன். புகழேந்தி உள்ளிட்டோர் நேற்று மாலை நாஞ்சில் சம்பத்தின் வீட்டுக்குச் சென்று அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய சொன்னோம். ஆனால், அவர் முடிவில் மாற்றமில்லை என்று கூறிவிட்டார் என்றனர்.

நாஞ்சில் சம்பத் மதிமுகவிலிருந்து விலகியதற்கான காரணமாக முன்வைக்கப் பட்டது- சாஞ்சி வரும் ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வைகோவுடன் ஒத்துழைக்கவில்லை என்பது. அது அப்படியே நிலைத்து விட்டது. இப்போது தினகரனுடன் ஒத்;;;;துழையாமைக்கு அவரின் திராவிட இயக்கப் பற்று காரணமாக முன்வைக்கப் படுகிறது. அப்படியானால் நாஞ்சில் சம்பத்தின் இயல்புதான் என்ன? ஏதவாதொரு வகையில் நடுவில் ஆளும் ஏதாவதொரு கட்சிக்குத் துதிபாடி கொண்டிருக்கும் திராவிட அரசியலா? 

சசிகலா செயலலிதாவின் தோழிதான்! செயலலிதா வீட்டு வேலைக்காரியில்லை. செயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு சசிகலா நடராசன் என்பதுதான் அடையாளம். ம.நடராசன் தமிழ் அடையாளத்தை விரும்புகிறவர். அந்த வகையில் தினகரன் உணர்வடிப்படையாக தமிழ் அடையாளத்தை முன்னெடுப்பவராகவே இருப்பார். தினகரன் கை ஓங்கும் போது தமிழகம் தனித்த அடையாளத்தோடு இந்தியாவிற்கே முன்;னோடியாக விளங்கும். திராவிடம் நமக்குத் தேவையாக இருந்தது; நடுவண் அரசுக்கு எதிராக நின்ற அண்ணா பெரியார் காலம் வரை. தற்;போது அதன் பரிணாம வளர்ச்சியான தமிழ் அடிப்படையே நமக்குத் தேவையாக இருக்கிறது.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,729.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.