Show all

தினகரன் உண்ணாநிலை அறிவிப்பு! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, நடுவண் அரசை வலியுறுத்தி, தஞ்சையில்

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் மற்றும், காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்க நடுவண் அரசை வலியுறுத்தி அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் வரும் 11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (25.03.2018) தினகரன் ஒருநாள், உண்ணாநிலை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். 6 வார காலத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்ட பிறகும், அதுபோல எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என நடுவண் அரசு அறிவித்துவிட்டது. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைக்க வலியுறுத்தி தமிழக சட்டமன்றததில் கடந்த புதன்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி தலைவர் தினகரன், தஞ்சையில் உண்ணாநிலை இருக்கப் போவதாக இன்று அறிவித்துள்ளார். தமிழ்தொடர்ஆண்டு-5094ல் (1993) நடுவர் மன்ற இடைக்கால ஆணையை நடுவண் அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்காததால் இதனை வலியுறுத்தி அப்போதைய முதல்வர் செயலலிதா உண்ணாநிலை இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இப்போது அதே வழியில், காவிரிக்காக தினகரன் உண்ணாநிலை இருக்க முடிவு செய்துள்ளார். இது மாநில அரசுக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,729.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.