Show all

மீண்டும் முளைவிடும், சமூகசீரழிவை முன்னெடுக்கும் சாதிப்பாகுபாடு!

இந்தியாவில்- பல ஆயிரம் ஆண்டுகளாக சாதியப் பாகுபாட்டில் அடிமையினமாக சில சாதியினர் நலிவில் ஆழ்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் மீட்புக்காகவே இடஒதுக்கீடு போன்ற சமூக சீரமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. ஆனாலும் சாதிய பாகுபாடு வடஇந்தியாவில் பேரளவாக காணப்படுவது அடிக்கடி செய்தியாகி வருகிறது. தமிழ்நாட்டிலும் தற்போது சாதியப்பாகுபாடு துளிர்விடத் தொடங்கியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

04,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: சாதிய பாகுபாடு வடஇந்தியாவில் பேரளவாக காணப்படுவது அடிக்கடி செய்தியாகி வருகிறது. தமிழ்நாட்டிலும் தற்போது சாதியப்பாகுபாடு துளிர்விடத் தொடங்கியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர், பணியாளர், மாணவர் இடையே சாதி பாகுபாடு புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் எச்சரித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள, பாஞ்சாகுளம் பள்ளியில், சாதி பாகுபாடு நடந்ததா என்பது குறித்து, விசாரணை நடத்தப்படுகிறது. பள்ளிகளில், ஆசிரியர், மாணவர், பணியாளர் சாதி பாகுபாடு நடக்கிறதா என்பது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர் உள்ளிட்டோர் முறையாக கண்காணிக்க வேண்டும். சாதி பாகுபாடு நடப்பதாக புகார் எழுந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,378.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.