Show all

உண்மையிலேயே செயலலிதாவின் மகளோ! என்பதான அம்ருதாவின் அடுத்த கட்ட நகர்த்தல்

05,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதாவின் மகள் எனக் கூறி பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனக்கும், தனது தாய்க்கும் மரபணு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தனது தாயின் உடலை தோண்டி எடுத்து வைணவ சம்பிரதாயப்படி சடங்குகள் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

அந்த மனுவை விசாரித்த அறங்கூற்றுவர்கள் அடிப்படை ஆதாரங்கள் ஏதும் இல்லையென அதை தள்ளுபடி செய்தனர். மேலும் அம்ருதா இந்த வழக்கை உரிய ஆதாரங்களைக் கொண்டு உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு பதிகை செய்யலாம் என்றும் அறங்கூற்றுவர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து அம்ருதா சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர் கிருபாகரன், ஜெயலலிதாவின் உடலை ஏன் தோண்டி எடுத்து டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள கூடாது என்றெல்லாம் அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பினார்.

செயலலிதாவின் உடலை தோண்டி யெடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் வழக்கு தொடர்ந்ததாக இல்லாமல், அம்ருதாவின் அடுத்த கட்ட நகர்த்தல் உண்மையிலேயே அவர் செயலலிதாவின் மகளாக இருக்கக் கூடுமோ என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஆம்! அம்ருதா தனது வழக்கறிஞர் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அதில் ஜெயலலிதாவின் உயிரியல் மாதிரிகள் இருக்கின்றனவா என்று கேட்டுள்ளார். மேலும் அவை இருந்தால் டிஎன்ஏ சோதனைக்காக பாதுகாப்பாக எடுத்து வைக்க வேண்டும் என்றும் அம்ருதா கோரிக்கை விடுத்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,671

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.