Show all

பாஜக தமிழகத்தில் உலா வருவதற்கு இரண்டு கட்டைக் கால்களா கமலும், ரஜினியும்

05,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மறைந்த ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக கமல் கூறியுள்ளார்.

அப்துல் கலாமிற்கு பல கனவுகள் இருந்தன. அவரைப் போல பல கனவுகளைக் கொண்டவன் என்பதால் கலாம் வீட்டில் இருந்து தனது பயணத்தை தொடங்குவதாக கமல் கூறியுள்ளார். கமலின் அரசியல் பிரவேசம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கமல் திடீரென அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றார். கமலுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் ரஜினி கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினியின் கருத்து குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மக்களையே மக்கள் முன்பு நிறுத்தப் போகிறேன். அவர்களின் பலம் தான் நாட்டையே புரட்டிப் போடும், அது அவர்களுக்குத் தெரியும், அதை நான் நினைவு படுத்தப் போகிறேன். ரஜினி கருத்தை வழிமொழிகிறேன் ரஜினியுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம் என்பது எல்லாவற்றிற்குமே ஒரு நல்ல மருந்து. அதுவே என் பதிலாகவும் இருக்கட்டும், இணைந்து செயல்படுவது குறித்து ரஜினி சொன்ன கருத்தையே நானும் வழிமொழிகிறேன் என்றார்.

பகுத்தறிபவன் அவ்வளவுதான், அதில் உங்கள் கடவுளை கண்டறிவதும் ஒரு முக்கியமான அறிவுதான். அதை அறிந்து அன்பாக எல்லோரும் ஒற்றுமையாக இருக்க என்னென்ன வழி இருக்கிறதோ அதை செய்யலாம். எதிர்காலத்தில் ஆன்மிக அரசியலில் இணைவதற்கான வழி இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல், அது செய்ய வேண்டிய அவசியமில்லை என்றார். என் நம்பிக்கை எனக்கு அவருடைய நம்பிக்கை அவருக்கு என்றும் கமல் பதிலளித்துள்ளார்.

பாஜகவின் இரட்டைக் குழல் துப்பாக்கியில் இருந்து வெளிப்;படும் இரண்டு குண்டுகள்தான் கமலும், ரஜினியும் என்று பொது மக்கள் ‘அடவிடுங்கப்பா என்ற பாணியில் தமிழக மக்கள் தெளிவாகவேயிருக்கிறார்கள்.

திரவிடத்திற்கு அடுத்தது தமிழியம் மட்டுமே என்பதை பாஜக புரிந்து கொண்டால், அது தமிழகத்தில் கட்டைக் காலையாவது ஊன்ற முடியும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,671

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.