Show all

அறிந்து கொள்வோம்! நீண்ட காலம் பயன்படுத்தத் தேவையில்லாத வங்கி ஆதாய அட்டையை முடக்கி வைத்து பாதுகாக்கலாம்.

மேலும், ஆதாய அட்டை மற்றும் கடன் அட்டைகளை, நீண்ட நாட்கள் பயன்படுத்தப் போவதில்லை என்ற சூழ்நிலையில், அந்த அட்டையை, வாடிக்கையாளர்களே முடக்கி வைக்கவும்  முடியும். இது போன்ற, பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அவற்றை வாடிக்கையாளர்கள் வங்கிகளில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  வங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில், ‘ஸ்கிம்மர்’ எனும் வங்கி ஆதாய அட்டை விபரங்களை திருடும் இயந்திரம் பொருத்தி, வாடிக்கையாளர்களின் பணத்தை திருடும் சம்பவம், அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ‘சிப் பொருத்தப்பட்ட, வங்கி ஆதாய அட்டையின் விபரங்களை, திருட முடியாது என, பரவலான, ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், ’சிப்’ உள்ள அட்டை, முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது என, கூறப்படுகிறது. 

இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: கணக்கின் விபரங்களை உடனடியாகவும், எளிதில் அடையாளம் காண்பதற்காகவும், வங்கி ஆதாய அட்டை, கடன் அட்டைகளில் சிப் பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த அட்டை மிகவும் பாதுகாப்பானது என நினைப்பது தவறானது. ஸ்கிம்மர் இயந்திரத்தால், எந்த அட்டையின் விபரங்களையும், எளிதில் திருட முடியும். பணம் வழங்கும் இயந்திரத்தில் ஸ்கிம்மர் போன்ற கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதில், வாடிக்கையாளர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், அட்டைகளில், பணம் எடுக்கக் கூடிய அளவை, வாடிக்கையாளர்களே நிர்ணயிக்க முடியும். அற்கான வசதி, அனைத்து வங்கிகளிலும் உள்ளன.

மேலும், ஆதாய அட்டை மற்றும் கடன் அட்டைகளை, நீண்ட நாட்கள் பயன்படுத்தப் போவதில்லை என்ற சூழ்நிலையில், அந்த அட்டையை, வாடிக்கையாளர்களே முடக்கி வைக்கவும்  முடியும். இது போன்ற, பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அவற்றை வாடிக்கையாளர்கள் வங்கிகளில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,229.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.