Show all

820 அரங்குகள், 1.5 கோடி புத்தகங்கள்! 42வது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இன்று இரண்டாவது நாள்

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 42-வது சென்னை புத்தகக் காட்சி நேற்று தொடங்கி இன்று இரண்டாவது நாள். நந்தனம் கிறித்துவ இளைஞர் சங்கத் திடலில் நடைபெறவுள்ளது. 820 அரங்குகள், 1.5 கோடி புத்தகங்கள், பல லட்சம் வாசகர்கள் எனக் களைக்கட்டத் தொடங்கியது.

இந்தக் கண்காட்சியில் தமிழுக்கு 487, ஆங்கிலத்துக்கு 294, தகவல்தொழில் நுட்பத்திற்கு 13, பொது அரங்குக்கு 26 என, மொத்தம் 820 அரங்குகள்இடம்பெற்றுள்ளன. 

இந்த விழாவில், தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள், முன்னாள் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் தங்கர்பச்சான், ஆட்சியர் வெ.இறையன்பு, எழுத்தாளர் நாஞ்சில்நாடன் உட்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,023.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.