Show all

135 புதிய மாருதி ஜிப்சி வாகனங்களை முதல்அமைச்சர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்

சென்னை மாநகர காவல் துறையின் பயன்பாட்டிற்காக 225 இன்னோவா மற்றும் பொலிரோ ரோந்து வாகனங் களையும், 403 இருசக்கர ரோந்து வாகனங்களையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே வழங்கியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகரின் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சென்னை பெருநகர காவல் துறையினர் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள குறுகிய சக்கர அமைப்பு கொண்ட 135 வாகனங்கள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றப் பேரவையில் அறிவித் திருந்தார் அதன்படி, சென்னை பெருநகர காவல் துறையினரின் ரோந்துப் பணிக்கு 8 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 135 புதிய மாருதி ஜிப்சி வாகனங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்புதிய மாருதி ஜிப்சி ரோந்து வாகனங்களில் நவீன மின்னணு அறிவிப்பு பலகைகள், தொலைத் தொடர்பு கருவிகள் மற்றும் இதர நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 135 மாருதி ஜிப்சி ரோந்து வாகனங்களுடன் சேர்த்து சென்னை பெருநகர காவல்துறையில் தற்போது 360 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும், 403 இருசக்கர ரோந்து வாகனங்களும் செயல்பாட்டில் உள்ளன.

நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், (ஓய்வு), உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அசோக் குமார், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.